காய்கறி வாங்க செல்பவர்களின் கவனத்திற்கு!கட்டாயம் படிங்க! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காய்கறி வாங்க செல்பவர்களின் கவனத்திற்கு!கட்டாயம் படிங்க!

காய்கறி வாங்க செல்பவர்களின் கவனத்திற்கு!கட்டாயம் படிங்க!


இந்த செய்தி தொகுப்பில் காய்கறிகளை எப்படி எந்த முறையில் பார்த்து வாங்க வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம். வாழைத்தண்டு வாங்கும் பொழுது,அதன் உள் பகுதி சிறுத்தும்,அதன் மேல் பகுதி நார் அதிகம் இல்லாதவாறும் பார்த்து வாங்க வேண்டும். 

வெள்ளை வெங்காயம் வாங்கும்போது,அதை நசுக்கி பார்த்து வாங்க வேண்டும்.அப்போது அதை நசுக்கும்போது அதில் இருந்து சாறு வர வேண்டும். முருங்கைக்காய் வாங்கும்போது அதை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை கொண்டு முறுக்கி பார்த்து வாங்க வேண்டும்.

அப்படி முறுக்கும்போது அது எளிதில் வளைந்தால் அது நல்ல முருங்கை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்.ஆனால் அது நன்கு உறுதியாக இருந்தால் நல்ல இனிப்பாக இருக்கும். மக்காச்சோளம் வாங்கும்போது அதை அழுத்தி பார்த்து வாங்க வேண்டும்.

அப்போது மக்காச்சோள மணிகள் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச்சோளம். தக்காளி நன்கு சிவப்பாக இருந்தால் தான் உணவு நல்ல சுவையாக இருக்கும். கோவைக்காய் வாங்கும்போது,அந்த காய் முழுவதும் பச்சையாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் அது நன்றாக இருக்கும்.அதில் சிறிதளவு சிவப்பு இருந்தால் கூட வாங்கக்கூடாது. குடைமிளகாயின் தோல் சுருங்கி இருந்தால் அதை வாங்க கூடாது.அதே போல் கரும்பச்சை நிறத்தில் இருந்தாலும் அதை வாங்க கூடாது.


For vegetable buyers, this is a comprehensive guide on how to buy vegetables. 

When buying a banana cord, the inner part is small and the upper part of the fiber should be purchased. When you buy a white onion, you have to look for it to be crushed. When buying a drumstick, you should buy it with a thumb and forefinger. 

Sugar beet can be bitten and blackened, but if it is firm enough, it is good sweet. When buying maize, you need to look at it and buy it. If the tomatoes are well red, the food is good. 

When you buy kovaikai, the whole kai should be green. Only then will it look good. If the skin of the umbilical cord is wrinkled, you should not buy it.

No comments:

Post a Comment

Please Comment