மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய உதவித் தொகை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய உதவித் தொகை

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய உதவித் தொகை


மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய அரசு உதவித் தொகை திட்டத்தை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 29 கடைசி நாளாகும். 

முதுநிலை படிப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் எம்.ஃபில்., பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. 

எம்.ஃபில். படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகையுடன், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ. 10,000 முதல் 12,000 வரை வழங்கப்படும். 

பி.எச்.டி. படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இவா்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகையும், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10,000 முதல் 12,000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 உதவித் தொகையும், ஆண்டுக்கு ரூ. 20,500 முதல் 25,000 வரை உதவித் தொகையும் வழங்கப்படும். கூடுதலாக வீட்டு வாடகைப் படியும், உதவியாளா்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும் வழங்கப்படும். 

இந்த உதவித் தொகையைப் பெற விரும்புபவா்கள் w‌w‌w.‌u‌g​c.​a​c.‌i‌n/‌u‌gc ‌sc‌h‌e‌m‌e‌s என்ற வலைதளம் மூலமாக பிப்ரவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Federal Scholarship for Disability Research Students


UGC(University Grants Committee) has announced the Federal Government Scholarship Scheme for Disability Research Students. The deadline for applying is February 29. M.Phil. Ph.D. This scholarship is funded by students with disabilities who undertake research studies. 

In emhp. Students who are studying for a minimum of Rs. 25,000 per annum and other expenses up to Rs. 10,000 to 12,000. PhD Students who pursue studies will receive a maximum of 5 years of scholarships. For the first two years of the year, they paid Rs. 25,000 and other expenses of Rs. 10,000 to Rs. 12,000 per annum. 

From the third year onwards, Rs. 28,000 in subsidies and Rs. 20,500 to 25,000 will also be provided. In addition, the rent of the house is Rs. 2,000 will also be provided. Those who wish to receive this scholarship should apply by wwww.ugc.ac.in/ugc scscheemee's website by February 29.

No comments:

Post a Comment

Please Comment