விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர விண்ணபங்கள் வரவேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர விண்ணபங்கள் வரவேற்பு

விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர விண்ணபங்கள் வரவேற்பு



புதுச்சேரி:புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற, 18 வயதிற்குட்பட்ட வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய பொறுப்பாளர் முத்துகேசவலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், 2020--2021ம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள், 

வீராங்கனைகள் சிறப்பு பயிற்சி பெறுவதற்கான தேர்வு முகாம் பிப்., 10 மற்றும் 11ம் தேதி இரு நாட்கள் நடத்தப்படுகிறது.பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறுதல் மற்றும் வெளியிலிருந்து வந்து பயிற்சி பெறுதல் என்ற பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

12 முதல் 18 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஹாக்கி, கபடி, ஹாண்ட் பால் போட்டிகளுக்கு ஆடவருக்கும், வாலிபால், பளு துாக்குதல், டேபிள் டென்னிஸ், கோகோ, டேக்வோண்டோ போட்டிகளில் இருபாலரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்திங் இன்று 30ம் தேதி காலை 10:00 மணி முதல் பிப்., 7ம் தேதி மாலை 4:00 மணி வரை வழங்கப்படும்.

தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மூன்று புகைப்படம், அசல் மற்றும் நகல் பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, 

அரசு மருத்துவரால் அளிக்கப்பட்ட உடற்தகுதி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து வரும் பிப்ரவரி 10ம் தேதி காலை 7:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 0413-2357819/ 94430 49135 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Applications are welcome to join the Sports Training Center


Puducherry: Puducherry India Sports Authority training center to train 18 players under the age of Puducherry, India Sports Authority Training Center in charge of varaverkappatukinranaitu muttukecavalu applications made by the press:

Pondicherry Indira Gandhi Sports Stadium, 20202021m Year athletes, players challenge 12 to 18 year olds can apply. Hockey, Kabaddi, Hand Ball Match, Volleyball, Weightlifting, Table Tennis, Cocoa and Taekwondo Competitions are available for selection. 10:00 a.m. Feb. 7, 4:00 p.m. 

Athletes wishing to attend the exam must submit a completed application, three photographs, original and duplicate birth certificates, location certificates, a ration card, aadhaar card, a fitness certificate issued by a government doctor at 7:00 am on February 10. 0 for more details Contact 413-2357819 / 94430 49135 as stated in the press release.

No comments:

Post a Comment

Please Comment