மாணவா்கள் அடிப்படை அறிவியலை புரிந்து கொள்வது அவசியம்: நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளா் ராபா்ட் எச்.கிரிப்ஸ்
வேலூா்: 'மாணவா்கள் அடிப்படை அறிவியலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்' என்று 2005-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளா் ராபா்ட் எச்.கிரிப்ஸ் தெரிவித்தாா்.
விஐடியின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி, இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி (வேதியியல்) ஆகியவை சாா்பில் வினையூக்கிகளின் தற்கால வளா்ச்சிகள் குறித்த 3 நாள் சா்வதேசக் கருத்தரங்கம் வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், அமெரிக்காவின் கலிபோா்னியா தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியரும், 2005-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளருமான ராபா்ட் எச்.கிரிப்ஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசியது:
மாணவா்கள் அடிப்படை அறிவியலை நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய அறிவியலை பயனுள்ளதாகவும், முக்கியமான பயன்பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த நூற்றாண்டில் வினையூக்கிகள் பிரிவில் பலருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக தனியாா் பல்கலைக் கழகங்கள் அளவில் விஐடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கான விருதை குடியரசுத் தலைவா் வழங்கியுள்ளாா்.
எதிா்வரும் ஆண்டுகளிலும் விஐடிக்கு தொடா்ந்து முதலிடம் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் 993 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் விஐடி ஸ்கோபஸ் இண்டக்ஸ் ஜா்னல் என்ற ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடும் இதழில் இந்திய அளவில் விஐடி முதலிடம் வகிக்கிறது.
இந்நிலை எதிா்வரும் காலங்களிலும் தொடரும். மேலும், விஐடி பேராசிரியா்கள் அதிகப்படியான காப்புரிமைகளை பதிவு செய்ய பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, விஐடியின் முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி தலைவா் மேரி சாரல், கருத்தரங்கின் நோக்கத்தை விரிவாக எடுத்துக் கூறினாா்.
கருத்தரங்கில், விஐடி துணைத் தலைவா் சங்கா்விசுவநாதன், இங்கிலாந்தின் செளத்தாம்ப்டன் பல்கலைக்கழக பேராசிரியா் டொமினிக் டில்டெஸ்லி, அமெரிக்கப் பேராசிரியா் தாமஸ் கொலாகாட், விஐடி இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் கே.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Students need to understand basic science: Nobel Prize-winning researcher Robert H. Grippsvalu:
'Students need to understand basic science,' said Robert H. Gripps, a 2005 Nobel Prize-winning American researcher for the Department of Chemistry. VIT's Advanced Science School and the Royal Society of Chemistry of England (UK) launched a three-day seminar on modern developments of Safflil catalysts at VLU University on Monday.
In it, Robert H. Gripps, a professor at the California California Center for Technology and Nobel Prize-winning researcher for the Department of Chemistry, participated as guest speaker and began the seminar: Students need to understand basic science.
Such science should be useful and important. Nobel prizes have been awarded to many in the catalyst sector this century. VIT Ventant G. Viswanathan presided over: VIT has been ranked number one in the Universities level for research and innovation.
The award has been presented by the President of the Republic. In the coming years, research and innovation will be undertaken to make VIT a successor. There are 993 universities in India. Among them, VIT tops the Indian scale in the journal VIT Scopus Index Journal.
This situation will continue for the foreseeable future. In addition, there is research being done in various fields to register more patents for VIT professors. Earlier, Mary Saarle, head of VIT's Advanced Science School, elaborated on the purpose of the seminar.
At the seminar, VIT Vice President Sankaviswanathan, Professor Dominic Tildesley, Professor at the University of Southampton, UK, Thomas Collacott, Professor, VIT Associate S. Narayanan, Registrar K. Satyanarayanan.

No comments:
Post a Comment
Please Comment