'மாணவர்களுக்கு எளிமையை கற்று கொடுங்கள்' கவர்னர் பன்வாரிலால் புரோஹித் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'மாணவர்களுக்கு எளிமையை கற்று கொடுங்கள்' கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

'மாணவர்களுக்கு எளிமையை கற்று கொடுங்கள்' கவர்னர் பன்வாரிலால் புரோஹித்


வேலுார்:''மாணவர்களுக்கு எளிமையான வாழ்க்கை, நல்லொழுக்கத்தை, ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆசிரியர் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம் சார்பில், வேலுாரில், 1969ம் ஆண்டு ஆசிரியர் இல்லம் துவக்கப்பட்டது.இதன் பொன் விழா, வேலுார் ஊரிசு கல்லுாரியில், நேற்று நடந்தது. 

வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பொன் விழா மலரை வெளியிட்டு, நல்லாசிரியர் விருது பெற்ற, 10 பேருக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களை முன்மாதிரியாக கொண்டு, எதிர்காலத்தை தீர்மானிக்கின்றனர். 

எனவே, எளிமையான வாழ்க்கை முறை, நல்லொழுக்கத்தை, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்கள் ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.

மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், துவக்கத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, பின் உயர்ந்த பதவிக்கு வந்தார். அப்போதும் அவர், எளிமையை கடைபிடித்தார்.வாழ்க்கையில், நேரத்தின் முக்கியத்துவம், மனித மாண்பு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். 

பள்ளியில், வாரம் ஒரு மணி நேரம், ஆளுமைத்திறன் வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், வேலுார் கலெக்டர் சண்முகசுந்தரம், சி.எஸ்.ஐ., ஆயர் நித்யானந்தம், சங்க தலைவர் குணசீல பூபதி உட்பட, பலர் பங்கேற்றனர்.

'Teach simplicity to students' Governor Banwarilal Purohit

Vellore : "Teachers should teach their students a simple life, a good life," said Governor Panwarilal Prohit. , Happened yesterday. Governor of the Velur VIT, Vishwanathan led the function.

Governor Banwarilal Borohit released the Golden Jubilee Flower, certifying 10 honorary scholars and awarding them: Students, as their role models, determine the future. Therefore, teachers should teach the simple way of life, the virtue. 

To make good students, teachers need to be transparent and transparent. Still, he maintained the simplicity. At the function, Velur Collector Shanmugasundaram, CSI, pastor Nityanandam, association president Gunaseela Bhupathi and many others participated in the function.


No comments:

Post a Comment

Please Comment