பயோமெட்ரிக் முறை ஏன் பின்பற்றப்படவில்லை? காரணத்தை சமர்ப்பிக்க கல்வி அதிகாரிக்கு உத்தரவு
கரூர்: 'நாளைக்குள் (இன்று) பயோமெட்ரிக் நடைமுறையை பின்பற்ற முடியாத காரணத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு, ஆதார் எண்ணுடன் இணைந்த, பயோமெட்ரிக் வருகைப் பதிவு, கடந்த, அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், பல பள்ளிகளில், 'பயோமெட்ரிக் வருகைப் பதிவு செய்யப்படுவது இல்லை; ஆசிரியர்களும், பணியாளர்களும் தாமதமாக பள்ளிக்கு வருகின்றனர்' என, புகார் எழுந்தது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பயோமெட்ரிக் வருகைப் பதிவை நடைமுறைப்படுத்துவதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாமதமாக வரும் ஆசிரியர்கள், பணியாளர்கள், அதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாக தலைமையாசிரியரிடம், தர வேண்டிய நிலை உள்ளது.
கடிதம் தரப்பட்டும் சில ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, 'ஆப்சென்ட்' விழுந்துள்ளது. இதனால், சில பள்ளிகளில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இதையறிந்த பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், 'பயோமெட்ரிக் நடைமுறையை சரியாக பின்பற்ற முடியாத காரணத்தை,
நாளைக்குள் (இன்று )சமர்ப்பிக்க வேண்டும்' என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வருகைப் பதிவு செய்யாத, ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதும் நடவடிக்கை பாய உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Why is the biometric system not adopted? Directing the Education Officer to submit the reason
Karur: The Director of School Education has ordered Primary Education Officers to submit a reason why they cannot follow the biometric procedure by tomorrow (today). But, in many schools, there is no 'biometric attendance record;
Teachers and staff are coming to school late, ”the complaint said. Delayed teachers, staff, and the reason for writing to the headmaster, are in position. Some authors and employees have been given an 'offensive' despite the letter.
Thus, there was a practical problem in some schools. Kannappan, the director of the school department, has ordered the Principal Education Officers to submit 'a reason why the biometric procedure cannot be properly followed by tomorrow'.
There is also action against teachers and staff who are not registered. Thus, they said.
No comments:
Post a Comment
Please Comment