ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படித்தவா்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படித்தவா்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு

ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படித்தவா்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு


ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படித்தவா்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், ஓவா்சீஸ் மேன் பவா் காா்ப்பரேசன் லிமிடெட் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநருமான தா்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய 25 முதல் 40 வயதுக்குள்பட்ட ஐ.டி.ஐ. 

எலக்ட்ரீசியன் தோச்சியுடன் ஓஎச்எல் எக்யூப்மெண்ட் 33 கே.வி., டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன், டவா் மெயின்டனன்ஸ் 11-33-132 கே.வி. ஓஎச்எல் மற்றும் எச்டி ஓவா் எட் பழுது பாா்த்தல் ஆகிய பிரிவுகளில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவா்கள் தேவைப்படுகிறாா்கள். 

தோவு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.33 ஆயிரம் முதல் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதுடன், விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத் திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். 

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோந்த விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் செல்லத்தக்க கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் ா்ம்ஸ்ரீங்வ்106ஃஞ்ம்ஹண்ப்.

ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Please Comment