பாடகியான பழங்குடி மாணவி அரசு அதிகாரிகள் உதவிக்கரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாடகியான பழங்குடி மாணவி அரசு அதிகாரிகள் உதவிக்கரம்

பாடகியான பழங்குடி மாணவி அரசு அதிகாரிகள் உதவிக்கரம்


பந்தலுார்:பந்தலுார் அருகே, பென்னை வனப்பகுதியில் குடியிருப்பவர்கள் சந்திரன்;சுசீலா. காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த இவர்களின் மகள் சீதா14. இவர் முக்கட்டி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில், 

7ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் பழங்குடியின சமுதாய பாடல்களை சிறப்பாக பாடுவதால், கிராமத்தில் பிரபலமாக உள்ளார். 

இவரின் திறமையை வெளியே கொண்டு வரும் வகையில், பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர், சிறப்பு பயிற்சியளித்து, சில இடங்களில் வேறு சில தெய்வீக பாடல்களையும் பாட வைத்தனர்.

இவர்களுடன், ஸ்ரீனிவாசா அறக்கட்டளையின் கள இயக்குனர் சுந்தர்ராஜன் என்பவர், இணைந்து தற்போது, முறையாக பாடல் பயிற்சி அளிக்கும் செலவுகள் செய்து வருகின்றனர்.

சீதாவின் பழங்குடியின பாடலை கேட்ட. கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், இவரை பற்றி, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினார். 

பின்பு, சிறப்பு அனுமதி பெற்று, மாணவியின் பயிற்சிக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது, இந்த மாணவி, தனியார் தொலைக்காட்சி போட்டியில் பங்கேற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.


Singer Aboriginal Student Government Officials Help: 



Pantaluar: Their daughter is Sita, 14, from the forestry community. He is studying in Mukkati Government Tribal Middle School, 7th grade. To bring out his talents, the school headmaster Samudrapandian and the teacher Mariyappan gave special training and sang some other divine songs in the field. 

Hearing the song. Cuddalore RTO Rajkumar spoke to the district collector Innocent Divya about him. Then, with special permission, he has taken steps to train the student. Currently, the student is participating in a private television competition and is advancing to the second round.

No comments:

Post a Comment

Please Comment