வைஃபை, டிவி, எஃப்எம் ரேடியோ ஆகியவற்றைக் கொண்டு
ஒருங்கிணைந்த ‘வைஃபை’யை வடிவமைத்த அரசு பள்ளி மாணவி
தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிக்கு தேர்வு
ஒருங்கிணைந்த ‘வைஃபை'யை (Wi-fi) வடிவமைத்த அரசு பள்ளி 8-ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி தேசியப் போட் டிக்குத் தேர்வாகியுள்ளார்.
6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவி யருக்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவியல் தொழில்நுட்பத்தின் கீழ் ‘இன்ஸ் ஃபயர் மானக்' என்ற பெயரில் ஆண்டுதோறும் அறிவியல் கண் காட்சி தேசிய அளவில் நடை பெறும்.
அதில் பங்கேற்க படைப்பு களை தேர்வு செய்ய மாநில அள விலான ‘இன்ஸ்ஃபயர்' முகாம் புதுவை ஜீவானந்தம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி, தனது அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தரின் வழிகாட்டுதலில், ஒருங்கிணைந்த ‘வைஃபை' (wi-fi) என்கின்ற அறிவியல் உபகரணத்தை வடி வமைத்திருந்தார். இதன்மூலம் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ள இவர், மாநில அளவில் இருந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த வடிவமைப்பு பற்றி மாணவி பாக்கியலட்சுமி, அறிவியல் வழிகாட்டி ஆசிரியர் ஜெய சுந்தர் ஆகியோர் கூறியதாவது: தேசிய அளவில் போட்டியில் பங்கேற்க தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக, ‘ஆல் இன் ஒன்' - ‘வைஃபை' ஆன்டனாவை வடிவமைத்தோம்.
இதில், வழக்கமான ‘வைஃபை' சிக்னல் பெறுவதும், அனுப்புவதும் 500 மீ வரை இருக்கும். அத்துடன் டிவி சிக்னல் கிடைத்து, அதை பார்க்க முடியும். மேலும், எஃப்எம் ரேடியோ ‘வைஃபை' சிக்னலும் இதில் கிடைக்கும்.
ஐஐடி பேராசிரியர்கள் இப் படைப்பை பார்வையிட்டு தேர்வு செய்தனர்.
இந்தத் தேர்வைத் தொடர்ந்து, பயிற்சி பட்டறை ஒன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடக்க இருக்கிறது. அதில் பங் கேற்க அழைத்துள்ளனர். பின்னர் தேசிய அளவிலான போட்டி நடக்கும். அதில் வென்றால் நமது அறிவியல் படைப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் முன்பு காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவி பாக்கியலட்சுமியின் அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்கள் ஜெயசுந்தர் மற்றும் உதயசங்கர் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை இளஞ்சியம் பாராட்டி கவுரவித்தார். மேலும், நேற்றைய பள்ளி நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மாணவி பாக்கியலட்சுமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Government schoolgirl who designed WiFi with integrated WiFi, TV and FM radio
Selection for National Science Exhibition Competition
Pakilakshmi 8th grade student of Government School designed Wi-Fi integrated For students in grades 6 through 10, the Center for Human Resource Development will conduct a national annual Science Eye Show under the title "Ins Fire Fire". The state-level 'Inspire' camp was held at Puduvai Jeevanandam Government Higher Secondary School to select creatives to participate in it.
In this, Paakilakshmi, an 8th grade student of Married Government Middle School, under the guidance of her science teacher, Jayasundar, built a scientific equipment called 'Wi-Fi'. She has been selected for the national competition and is the only public school student to compete in the state level nationally. Commenting on this design, student Pagilakshmi and science guide Jaya Sundar said:
"It is a pleasure to be selected to compete nationally. For this purpose, we designed the all-in-one 'WiFi' antenna. In this case, the usual 'WiFi' signal receives and transmits up to 500 m. As well as getting the TV signal, you can watch it. FM radiotime Wi-Fi signal is also available.
The IIT professors visited the works and selected it. Following this examination, a workshop is to be held at the IIT campus, Chennai. In it, Pang asked to hear. Then there is the national level competition. That means he will be on display at our Republic of Science House of Science. Thus they said. Student Bhagiyalakshmi's Science Guide Teachers Jayasundar and Udayasankar were honored by the school's headmaster.
Also, at yesterday's school event, school teachers and students congratulated the student Bhakilakshmi.
No comments:
Post a Comment
Please Comment