அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பே காலி பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பே காலி பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பே காலி பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை 


சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தி.மு.க. உறுப்பினர் கு.பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:- 

அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகிறபோது, அதற்கு முன்பாகவே தேர்வு செய்து வைத்திருந்தால், அந்த காலி பணி இடங்களை நிரப்பலாம் என்று சொன்னீர்கள். அதை இப்போது இந்த அரசு நடைமுறைப்படுத்தி கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ்துறைகளில் எல்லாம் எப்போது பணி ஓய்வு பெறுகிறார்களோ, அதற்கு முன்பாகவே அந்த காலி பணி இடங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் இப்போது பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Measures to fill vacant posts before public servants retire


During the debate yesterday in the Assembly, the DMK Responding to a question raised by Member of Legislative: Chief Minister Edappadi Palanisamy,

You said that when government employees are retiring, they can fill those vacancies if they have already chosen. It is now being implemented by this Government. In the Highways, Public Works and Police Departments, it is advised to select the persons who need vacancies before they retire. Accordingly, work is now underway. Thus he said.


No comments:

Post a Comment

Please Comment