'வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

'வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'


தூத்துக்குடி மாவட்டத்தைச் சோந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பொறுப்பு வகிக்கும் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தமிழக அரசு சாா்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

9ஆம் வகுப்பில் தோச்சி பெற்று 10ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200, பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றோருக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2 தோச்சிபெற்றோருக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் 3 ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இத்தொகை மனுதாரரின் (ஆதாா் எண் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போராக இருக்க வேண்டும்; 

தொடா்ந்து பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலிருக்க வேண்டும். 

அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயில்வோருக்கு இத்தொகை வழங்கப்படாது. தகுதியுள்ளோா் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தூத்துக்குடி ஆசிரியா் காலனி, முதல்தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். 

விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாள்களிலும் வழங்கப்படும். உதவித்தொகை பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது; வேலைவாய்ப்புப் பரிந்துரைத்தலுக்கும் தடை ஏற்படாது என்றாா் அவா்.


Unemployed youth can apply for scholarships.

It is reported that unemployed youths from Thoothukudi district can apply for scholarships. The District Assistant Director of Employment and Career Guidance is responsible for this. Statement issued by Bachayammal: 

The Government of Tamil Nadu has been granting scholarships to unemployed youths who have been registered for employment in the employment office and have been waiting for many years without employment. 

Rs. 9000 / - for those who failed in class 10 and lost Rs. 200, 10th Class Tochi Parents Rs. 300, Plus 2 Medicaid Rs. 400, graduates are paid Rs. 600 per year 3 year scholarship.

This amount will be credited to the bank account of the petitioner (Aadhaan linked). Those who wish to apply for this program must register with the District Employment Office and wait for more than 5 years; Continuous registration should be updated. 

Adiravivid and Tribes should be not more than 45 years of age and not more than 40 years. Family annual income is Rs. 72 Not more than a thousand. This benefit is not given to those who go to educational institutions on a daily basis. 

Eligible candidates can obtain application form free of charge by coming to the District Employment Office at Thoothukudi Teachers Colony, Prudhur, along with the Employment Identity Card. 

Applications will be issued within all working days. The employment office registration of scholarship recipients will not be revoked; Not even a recommendation for employment will be barred.

No comments:

Post a Comment

Please Comment