அரசு பள்ளிக்கு இலவச ஆட்டோ :ஆசிரியர்களின் அசத்தல் முயற்சி
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளனர் புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்.பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:எங்கள் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 63 பேர் படிக்கின்றனர்.
தாசபாளையத்தில், இருந்து எங்கள் பள்ளி 2.5 கி.மீ., தொலைவில் உள்ளது. பஸ் வசதியும் இல்லை.அங்கிருந்து வரும் ஆறு மாணவ, மாணவியர், தொலைவு காரணமாக அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுத்து விடுகின்றனர். சிலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.
இதற்கு தீர்வு காண ஆசிரியர்கள் சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளோம். 6ம் தேதியிலிருந்து ஆட்டோவில் தாசபாளையம், மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதனால், இனி விடுப்பு எடுக்காமல் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். ஆட்டோவில் மாணவர்கள் வருவதை, வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், ஒருங்கிணைந்த கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Free Auto for Government School: Teachers Wonderful effort
Annuar: In Annur Union, there are 75 primary and 16 middle schools. Due to various reasons including inadequate infrastructure in government schools, enrollment of students is declining from year to year. crystal Kinranar.
Our school is about 2.5 km from Dasapaliyam. There are no buses, and six students from there often leave school due to distance. Some have even stopped schooling. We have arranged for teachers' own money to solve this problem.
Dasapalayam, Student and Student come to school in Auto from 6th. Thus, they will no longer take leave. Thus he said. Regional Education Officer Rangaraj and Integrated Education Regional Coordinator Subbulakshmi inspected the arrival of students in the auto and congratulated the teachers.

No comments:
Post a Comment
Please Comment