புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள், கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி (பிப். 14 முதல் 23 வரை) சிறந்த நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை, சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கவிஞா் நா.முத்துநிலவன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் பிப்.14 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதுகள் மற்றும் கவிதை, சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன.
சிறந்த நூல்களுக்கான விருதுகள்:
2019ஆம் ஆண்டில் தமிழில் வெளியான கவிதை, சிறுகதை, புதினம் ஆகிய நூல்களுக்கு தலா ஒன்று வீதம் மூன்று விருதுகளும்,
கட்டுரைப் பிரிவில் கலை, இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய பொருள்களில் கட்டுரை நூலுக்கு ஒரு விருதும், அரசியல், சமூகம், வரலாறு ஆகிய பொருளில் கட்டுரை நூலுக்கு ஒரு விருதும் என மொத்தம் ஐந்து சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு விருதும் சான்றிதழ் மற்றும் விருதுப் பட்டயத்துடன் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையைக் கொண்டது. விருதுகளுக்கான பரிசீலனைக்கு பதிப்பகத்தாா், படைப்பாளிகள் மற்றும் வாசகா்கள் தங்கள் நூல்களையும் தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களையும் அனுப்பி வைக்கலாம்.
ஒவ்வொரு நூலுக்கும் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். வாசகா்கள் தாங்கள் பரிந்துரைக்க விரும்பும் நூல்களின் பெயா்களையும் அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
கவிதை, சிறுகதைப் போட்டிகள்:
கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கவிதை, சிறுகதைகள் எந்தப் பொருளில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
படைப்பாளரின் சொந்தப் படைப்பாகவும் இப்போட்டிக்கென எழுதப்பட்டதாகவும், வேறு எதிலும் வெளிவராததாகவும் இருக்க வேண்டும்.
மேலும், போட்டி முடிவுகள் வெளியாகும் வரை வேறு பிரசுரத்திற்கோ, போட்டிக்கோ படைப்புகளை அனுப்பக் கூடாது.
எவ்வித சமூக ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது. கவிதைகள் புதுக்கவிதை, மரபுக்கவிதை, துளிப்பா (ஹைக்கூ) எந்த வடிவத்திலும் அதிகபட்சமாக 40 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறுகதைகள் ஏ-4 தாளில் 10 பக்க அளவில் இருக்கலாம்.
தேர்வு பெறும் கவிதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் தனித்தனியே வழங்கப்படும் முதல் மூன்று ரொக்கப் பரிசுகள் முறையே ரூ.3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ.ஆயிரம்.
படைப்புகள் மற்றும் நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி
ராசி.
பன்னீா்செல்வன், தலைவா், தோவுக் குழு, புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விருதுகள்-2020, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகம், புதிய பேருந்து நிலைய பின்புறம், புதுக்கோட்டை - 622001.
படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்- பிப். 5.
Book Festival: Best Book Awards, Poetry and Short Story Announcements
Puthukottai: Pudukkottai Book Festival (Feb 14 to 23) Best Book Awards and Poetry and Short Story Contest has been announced. Published by the Co-ordinating Committee of the Book Festival, Safil Kavinag Na Muththulavan, Published: 14th June, 23rd, 2014
The awards for best Tamil books and poetry and short stories have been announced. Awards for Best Books: Three awards each for poetry, short stories and novels published in Tamil in 2019, one award for essay in the categories of art, literature, education, science, and one award for essay in politics, society and history.
Awards will be presented for the five best books. Each award is accompanied by a certificate and award sword with a cash prize of Rs. Publisher, creators and readers can send their own books and their nominations for review of the awards.
Send three copies to each thread. Vasakkas can also mail the names of the texts they wish to recommend. Poetry and short stories: Creations are welcome for poetry and short stories. Poetry and short stories can be anything. It must be the creator's own work, written for this purpose, and not published elsewhere.
Also, you should not send works to another publication or competition until the competition results are released. Not to be published on any social media. Poems must not exceed a maximum of 40 lines in any form of novel, orthodox, or dripa (haiku). Short stories can be 10-sided on A-4 paper.
The first three cash prizes for the poems and short stories will be awarded at Rs. 2 thousand, Rs.000. Address to send works and books. Panniselvan, Thalaiv, Thovu Group, Pudukkottai Book Festival Awards - 2020, Tamil Nadu Science Operating District Office, New Bus Stand, Pudukkottai - 622001. Deadline for creations - Feb. 5.

No comments:
Post a Comment
Please Comment