ஒரு போன் போதும்! மின் தடை பிரச்னைகளுக்கு இனி தீர்வுகாண முடியும்...இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க வசதி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஒரு போன் போதும்! மின் தடை பிரச்னைகளுக்கு இனி தீர்வுகாண முடியும்...இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க வசதி!

ஒரு போன் போதும்! மின் தடை பிரச்னைகளுக்கு இனி தீர்வுகாண முடியும்...இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க வசதி!


உடுமலை;மின்தடை உட்பட பிரச்னைகளுக்கு, நேரடியாக சென்று புகார் எழுதி வைக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இலவச தொலைபேசி எண் மூலம் புகார் செய்து, தீர்வு கிடைக்கும் வகையில், மின் தடை நீக்கும் மையம் உடுமலையில், செயல்படத்துவங்கியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் தடை குறித்த புகார்களை தெரிவிக்கவும், உடனடி தீர்வு காணவும், முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

முதற்கட்டமாக பெருநகரங்களில் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இம்மையம் உடுமலையில் அமைக்கப்பட்டுள்ளது.உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், உடுமலை, அங்கலக்குறிச்சி மற்றும் பொள்ளாச்சி கோட்டங்கள் உள்ளன. 

அதோடு, அருகிலுள்ள நெகமம், தாராபுரம் கோட்டங்களை இணைத்து, உடுமலையில், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மின் தடை மையம், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து கோட்டங்களிலும், வீடு, தொழிற்சாலை, வணிகம் மற்றும் விவசாய மின் இணைப்பு என, 8 லட்சம் மின் இணைப்புகளுக்கு மேல் உள்ளன.மின் நுகர்வோர், '1912', மற்றும் இலவச தொலைபேசி எண் 180059951912 ஆகிய எண்களில், 24 மணி நேரமும், தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

அது, உடனடியாக சம்மந்தப்பட்ட ஒயர்மேன்களுக்கு தகவல் தரப்பட்டு சரி செய்யப்படுகிறது. இதன் மூலம், மின் தடை நீக்குவது எளிதாகியுள்ளது.மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மின் தடை நீக்கும் மையத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவாகிவிடும். 

மையத்திலுள்ள ஊழியர் மட்டுமன்றி, சம்மந்தப்பட்ட ஏரியா ஒயர்மேனுக்கும் இணைப்பு சென்று விடும். முழுவதுமாக கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். சம்மந்தப்பட்ட ஒயர்மேன் உடனடியாக சரி செய்ய வேண்டும்.புகார் வந்த மின் இணைப்பு எண், மின் தடை சரி செய்யும் வரை, நிலுவை காட்டிக்கொண்டிருக்கும். 

சரிசெய்யவில்லை என்றால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல், உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்று விடும். முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் குறைகளை, உடனடியாக சரி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, தினமும், 40 முதல் நுாறு அழைப்புகள் வரை வருகின்றன. பொதுமக்கள், மின் தடை புகார்களுக்கு, இம்மையத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்


One phone is enough! Electricity Problem Solutions can be solved ... Free Phone Number Reporting! 

Udumalai; Tamil Nadu Power Generation and On behalf of the Distributed Corporation, computerized power outages have been set up throughout the country to address complaints of power outages and seek immediate redress. 

Originally set up in the metropolis, this hub is currently located in Udumalai. The Udumalai Power Distribution Circle consists of Udumalai, Angalakurichi and Pollachi Forts. In addition, the computerized power outlet at Udumalai is located in the Udumalai Power Distribution Circle Supervisory Engineer's office, which is connected to the nearby Negamma and Tarapuram quotas.

'1912', and the free telephone number is 180059951912 As it happened, 24 hours a day, express contacted. It is immediately communicated and corrected to the wiremen involved. Eliminating the power bar has made it easier. My board officials have said that all calls to the disinfection center will be recorded. 

Not only the employee at the center, but also the affiliate area wireman will be linked. The entire computer is recorded. The concerned wireman has to be fixed immediately. If not corrected, the information will go to the top authorities over a certain period of time. 

With the computerization of the entire system, it is possible to immediately fix the grievances of the power consumers. Now, from 40 to 40 calls every day. This should be used for public and power outages. According to E-board officials

No comments:

Post a Comment

Please Comment