மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் அரசு மேல்நிலை பள்ளியில், குடியரசு தின விழாவையொட்டி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில், துணை நில் தொண்டு நிறுவன கல்வி அறக்கட்டளை சார்பில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
இதில், பிளஸ்2 வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற ஆனந்திக்கு ₹10,000, வின்சென்ட் பவுல் ₹8,000, வெங்கடேசன் ₹6,000 மற்றும் 10ம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் கவுசல்யாவிற்கு ₹5,000, பவித்ரா ₹3,000 மற்றும் ஜோதிலட்சுமிக்கு ₹2,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், ஜெயந்தி நடராஜன், ரமேஷ்கார்த்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Scholarships for students
Dharmapuri, Jan 29: A scholarship ceremony was held at Lalikam Government Secondary School near Nallampalli, Dharmapuri district, on the occasion of the Republic Day. School principal Srinivasan presided.
At the ceremony, a scholarship was awarded to a student who placed in the top three in the school's 10th grade and plus two public exams last year on behalf of the charity Education Foundation.
Of these, Anandhi, who passed the first three places in Class 2, was awarded ₹ 10,000, Vincent Bowl ₹ 8,000, Venkatesan ₹ 6,000 and ₹ 5,000 to Kaushalya, Pavithra ₹ 3,000 and Jothilakshmi ₹ 2,000.
Parents Teachers Association President Udayakumar, Panchayat Chairperson Parimala Mateshkumar, Foundation Administrators Natarajan, Jayanthi Nadarajan, Rameshkarthi and teachers were present.

No comments:
Post a Comment
Please Comment