NEET நுழைவுத்தேர்வுக்கு உதவும் பாடம்- பிளஸ் 1 உயிரியல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

NEET நுழைவுத்தேர்வுக்கு உதவும் பாடம்- பிளஸ் 1 உயிரியல்

NEET நுழைவுத்தேர்வுக்கு உதவும் பாடம்- பிளஸ் 1 உயிரியல்

பிளஸ் 1 உயிரியல் பாடம் பொதுத் தேர்வுக்கு அப்பாலும் முக்கியமானதாகும். ‘நீட்’ போன்ற அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் உயிரியல் பாடம் அடிப்படையானது. இதை உணர்ந்து படிப்பவர்களுக்கு தொலைநோக்கு பயன்களுடன், பொதுத்தேர்வின் மதிப்பெண்கள் உயரவும் வாய்ப்பாகிறது.
உயிரியல் வினாத்தாள் 70 மதிப்பெண் களுக்கானது. இதிலுள்ள உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல் என 2 பகுதிகளும் தலா 35 மதிப்பெண்களுக்கானவை. வினாக்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பெண்களில் இந்த 2 பகுதிகளும், ஒரே அமைப்பை கொண்டுள்ளன. இந்த வினாத்தாள் அமைப்பின் அடிப்படையில், முதல் கட்ட தயாரிப்பை பார்ப்போம்.
பிரிவு-1: ஒரு மதிப்பெண்களுக்கான இப் பிரிவில் தலா 8 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவை நேரடி வினாக்களாக மட்டுமன்றி, ‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாக்களின் பாணியிலும் கேட்கப்படுகின்றன. ‘கூற்று மற்றும் காரணம், பொருத்துக, சரியான அல்லது தவறான இணையை கண்டறிதல்’ என்பதாக அவை அமைந்திருக்கும். ஒன்றிரண்டு தவிர்த்த பெரும் பாலான வினாக்கள், மாணவர்களின் உயர் சிந்தனை ஆற்றலை சோதிக்கும் வகையில் பாடங்களின் உள்ளிருந்தே கேட்கப்படுகின்றன. பாடம்தோறும் முழுமையாக படித்திருந்தால் மட்டுமே இப்பிரிவில் முழு மதிப்பெண் சாத்தியமாகும்.
பிரிவு 2: கொடுக்கப்பட்ட 6 வினாக்களிலிருந்து 4-க்கு விடையளிப்பதாக இரு மதிப்பெண் பகுதி அமைந்துள்ளது (வி.எண்.9-14). பெரும்பாலானவை எளிமையான வினாக்களாக இருக்கும். ஒரு வினா எளிமையான படம் குறித்தானது.
பிரிவு 3: மூன்று மதிப்பெண் பகுதியானது கொடுக்கப்பட்ட 5 வினாக்களிலிருந்து எவையேனும் மூன்றுக்கு விடையளிப்பதாக அமைந்துள்ளது. (வி.எண்.15-19). இவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகும். பெரும்பாலான வினாக்கள் சற்று கடினத்தன்மை கொண்டிருப்பதுடன், படங்கள் சார்ந்து அமைந்திருக்கும். படம் தொடர்பான வினாக்களில் பாகங்களை கவனமாக குறிப்பது அவசியம். இவற்றில் படத்துக்கு 2, பாகங்களுக்கு 1 என மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
பிரிவு 4: ஐந்து மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ வகையிலான 2 வினாக்கள் கேட்கப்படுகின்றன (வி.எண்.20-21). இந்த வினாக்கள் 5 மதிப்பெண்ணுக்கான ஒரே வினாவாகவோ, இதர மதிப்பெண் வினாக்களின் தொகுப்பாகவோ(1+2+2 அல்லது 2+3) இடம்பெறும்.
ஒரு மதிப்பெண் பகுதிக்கு பாடங்களின் பின்னுள்ள வினாக்க ளுடன், பாடங்களை முழுமையாக புரிந்து படித்திருப்பது அவசியம்.
2 மற்றும் 3 மதிப்பெண்களில் நேரடி வினாக்கள் மட்டுமன்றி மறைமுக வினாக்களும் இடம்பெறும். இதற்கு ஒரு விடையி லிருந்து கேட்க வாய்ப்புள்ள வேறு பல வினாக்களை அடையாளம் கண்டு படிக்க வேண்டும்.
5 மதிப்பெண் பகுதியில் முக்கியமான பாடங்களில் அதிக கவனம் தந்து படிப்பதுடன், திருப்புதல் செய்வதும் அவசியம். உயிரி-தாவரவியலுக்கு 3,4,5,9,13,14,15 பாடங்களில் இருந்தே 5 மதிப்பெண் பகுதிக்கான வினாக்களை எதிர்பார்க்கலாம். 9-வது பாடத்தில் அமைப்பியல், வேறுபாடுகள் மற்றும் படங்கள் குறித்த வினாக்கள் முக்கியமானவை. அதிலும் 13,14,15 ஆகிய பாடங்க ளின் ‘சுழற்சி’ தொடர்பான வினாக்களை அதிகம் எதிர்பார்க்கலாம். அடுத்தபடியாக கீழ் வகுப்பு பாடங்களின் தொடர்ச்சியான 2,6,7 ஆகிய எளிமையான பாடங்களையும் சேர்த்து படிக்கலாம்.
உயிரி-விலங்கியலின் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு 5,6, 7,9,10,12 ஆகிய பாடங்கள் முக்கியமானவை. இதில் 12 தவிர்த்த இதர பாடங்களின் ‘உறுப்பு மண்டலங்களின் செயல்பாடுகள் மற்றும் குறைபாட்டு நோய்’ பற்றிய வினாக்கள் கேட்கப்படவும் வாய்ப்புள்ளது.
உயிரியலில் படங்களின் வாயிலாக பாடக்கருத்துக்கள் படிப்பது நல்ல பழக்கம். இதன் மூலம் பாடக்கருத்துக்கள், படத்தின் அமைப்பு என இரண்டும் நன்கு மனதில் பதியும். தாவரவியலை விட விலங்கியலின் படங்கள் நேரத்தை இழுக்கும் என்பதால் அதில் கூடுதல் பயிற்சி தேவை. 3 மதிப்பெண் பகுதியின் பட வினாக்களை 3,4,6,9,13,14 ஆகிய பாடங்களில் இருந்தே அதிகம் எதிர்பார்க்கலாம். முழுமதிப்பெண் பெற பட வினாக்களுக்கு முன்னுரிமை தரலாம். படம் வரைவதில் போதிய பயிற்சி இல்லா தவர்கள், இதர வினாக்களை தேர்வு செய்யலாம். படங்களை வரைவதில் அலங்கரித்தல் எதுவுமின்றி எளிமையாக வரை வதுடன், பாகங்களை சரியாக குறித்தால் போதும்.
உயிரி-தாவரவியல் மற்றும் உயிரி-விலங்கியலின் எளிமையான பாடங்களின் புத்தக வினாக்களைப் படித்தே உயிரியலின் தேர்ச்சியை உறுதி செய்யலாம். இதற்கு தாவரவியலின் 2,3,4,5,9,13,14,15 மற்றும் விலங்கியலின் 2,6,7,8,9,12 பாடங்கள் உதவும். குறிப்பாக இப்பாடங்களின் 2 மற்றும் 3 மதிப்பெண்வினாக்களை குறிவைத்து படித்தால், 5 மதிப்பெண் வினாக்களுக்கும் விடையளிப்பது எளி தாகும். அடுத்த கட்டமாக இதே பாடங்களின் உள்ளிருந்து கேட்க வாய்ப்புள்ள எளிமையான வினாக்களை ஆசிரியர் உதவியுடன் அடையாளம் கண்டு படிப்பதன் மூலம் மேலும் அதிக மதிப் பெண்களை பெறலாம்.
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் பெருமளவு நேரம் மற்றும் உழைப்பை திருப்புதலுக்கே ஒதுக்கியாக வேண்டும். பாடங்களை ஓரிரு முறை முழுமையாக வாசித்து, ஒட்டுமொத்தக் கருத்தை உள்வாங்குவதன் மூலம் உயர்சிந்தனைக்கான வினாக் களுக்கு சிறப்பாக பதிலளிக்க முடியும். மனப்பாடம் செய்வதை தவிர்த்துவிட்டு புரிந்து படிப்பதும், அதன் அடிப்படையில் திருப்புதல் செய்வதும் நல்லது. மாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடப் பகுதிகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் விரைவான திருப்புதலுக்கு உதவும்.
1 மதிப்பெண் பகுதிகளுக்கு தலா 10 நிமிடங்கள் ஒதுக்கலாம். அவ்வாறே, 2 மதிப்பெண் பகுதிகளுக்கு தலா 15, 3 மதிப்பெண் பகுதிகளுக்கு தலா 15, 5 மதிப்பெண் பகுதிகளுக்கு தலா 40 என்பதாக அதிகபட்ச நிமிடங்களை ஒதுக்கி தேர்வெழுதலாம். மிச்சமாகும் 20 நிமிடங் களை விடைத்தாள் சரிபார்ப்புக்கு ஒதுக்கலாம்.
அவசரகதியில் விடையளிப்பவர்கள் மற்றும் விடுபட்ட வினாக்களுக்கு கடைசி நேரத்தில் பதில் எழுதுவோர், தாவரவியல் மற்றும் விலங்கியல் விடைத்தாள்களில் மாற்றி எழுதி விடுகிறார்கள். இரு விடைத்தாளையும் வெவ்வேறு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வதால், குழப்பத்தில் மதிப்பெண் இழக்க நேரிடலாம். அதே போன்று வேறுபாடுகள் தொடர்பாக விடையளிக்கும்போது பாடக்கருத்துகளை மாற்றி எழுதுவது, விடையுடன் ஆப்ஷன் எழுதுவதில் தவறிழைப்பது ஆகியவற்றாலும் மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. இத்தவறுகளை தவிர்க்க, முழுமையான மாதிரி தேர்வுகளை பலமுறை எழுதிப் பார்ப்பது உதவும்.
- பாடக்கருத்துகளை வழங்கியவர்:
ப.லோகநாதன்,
முதுகலை ஆசிரியர் (விலங்கியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, மாம்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம்.

Plus 1 biology lesson is important beyond general selection. The biology lesson is the basis for all-India-wide entrance exams and various competitive exams, such as the Need Model. Those who realize this have the opportunity to rise to the marks of the general election, with far-reaching benefits.

The Biology Questionnaire is for 70 marks. There are two areas for bio-botany and bio-zoology, each with 35 marks. These 2 areas have the same structure in the number and scores of questions. Based on this questionnaire system, we will look at the first stage preparation.

Section-1: This question section for each of the 8 questions is asked. These are not only direct queries, but are also asked in the style of Need Need Entrance Questions. They form the claim and cause, match, and right or wrong parallelogram. A large number of questions, excluding one or two, are asked from within the subjects to test the students' higher thinking abilities. The full score in this section is possible only if the lesson is thoroughly studied.

Section 2: The two score area is the answer to the 4 out of the given 6 questions (VN9-14). Most are simple questions. One question is about simple image.

Section 3: The Three Score Section is the answer to any three of the given 5 questions. (Vien1519). Each of these is a mandatory question. Most of the questions are slightly rough and depend on the images. It is important to note the parts in the picture related questions. Scores of 2 will be allocated to the film and 1 to the parts.

Section 4: Two or more questions in the five-score area of ​​either type or number are asked (VN.20-21). These questions can be a single question of 5 marks or a set of other score questions (1 + 2 + 2 or 2 + 3).

It is necessary to have a thorough understanding of the subjects, along with the questions behind the subjects for a score area.

Scores 2 and 3 will include not only direct questions but also indirect questions. The answer to this is to identify and read a number of other possible questions.

It is important to focus on the important subjects of the 5 score area and turn it over. For Bio-Botany 3,4,5,9,13,14,15 subjects can expect 5 question marks. Chapter 9 questions about structure, variations and images. More about the 13,14,15 subjects in the rotation of questions. Subsequently, 2,6,7 simple subjects of lower class subjects can be read as well.

Subjects 5,6, 7,9,10,12 are important for the Bio-Zoology five score question. It is also possible to ask questions about the function of the organs and impairment of 12 other subjects.

It is a good practice to study Western subjects through pictures in biology. It is well thought out that both Westerns and the structure of the film. Images of zoology are more time-consuming than botany because they require more training. You can expect more from the 3, 3, 4, 4, 9,13,14 subjects. Prioritize image queries to get full marks. If you do not have enough training in drawing, you can choose other questions. Drawing pictures is easy without any decoration and the parts are marked correctly.

The mastery of biology can be ascertained by reading book questions of simple subjects of bio-botany and bio-zoology. This will be supported by 2,3,4,5,9,13,14,15 and 2,6,7,8,9,12 subjects of Zoology. Especially if you are targeting the 2 and 3 marks of these subjects, it is easy to answer the 5 score questions. The next step is to identify simple questions that are likely to be asked from the same subjects with the help of the teacher and get more and more women.

After completing half-year exams, much time and effort must be devoted to turning around. Subjects can respond better to hyperlocalized vinyls by reading the material more fully once in a while and embracing the overall concept. It is good to read and understand and turn away from it. Students can sit in groups and read syllabuses and share ideas, making for a quick turnaround.

You can allocate 10 minutes each to 1 score areas. Similarly, the maximum number of minutes can be chosen as 15 per 2 marks, 15 per 3 score areas and 40 per 5 score areas. The remaining 20 minutes can be assigned to answer sheet verification.

Emergency responders and last-minute responders to missing queries are rewritten in botany and zoological answers. Because both authors evaluate the answer to the question, respect in the confusion


No comments:

Post a Comment

Please Comment