நோ கார்டு... நோ கேஷ்... நோ பிராப்ளம் - SBI
பீம் ஆதார் எஸ்பிஐ மூலம் எளிதான நடைமுறையில் நீங்கள் பணம் அனுப்பவோ, வாங்கவோ முடியும். இதற்கு எந்த கார்டும் தேவையில்லை. வங்கியோ, ஏடிஎம்முக்கோ கூட செல்லத் தேவையில்லை. அதற்கு முன், பீம் ஆதார் பற்றி தெரிந்து கொள்வோம்.
பீம் ஆதார் பே ஆப் என்றால் என்ன?
உங்களுடைய ஆதார் எண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு பணம் செலுத்தும் வசதிதான் ஆதார் பே. ஆனால் பீம் ஆப் என்பது அப்படியல்ல. பீம் ஆப் ஆனது வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஒரு இ-வாலட் போல செயல்படுவது.
பீம் ஆப் மூலமாக நீங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு பணம் அனுப்பவும், வாங்கவும் முடியும். ஆனால் அதற்கு இணையவசதி கொண்ட, ஸ்மார்ட்போன் கண்டிப்பாக தேவை. ஆதார் பே ஆப்பிற்கு இவை தேவையில்லை.
மேலும் படிக்க - எஸ்பிஐ-ன் சிறப்பான இந்த 3 திட்டங்களும் உங்களுக்கு தான்
இதன் பயன்கள் என்னென்ன?
எளிமையான மற்றும் விரைவான பணப்பரிவர்த்தனை என்பதுதான் முதல் சிறப்பு. மேலும் உங்களுடைய பயோமெட்ரிக் தகவலின் அடிப்படையில் நடைபெறுவதால் பாதுகாப்பானதும் கூட. வணிகர்களும் பி.ஒ.எஸ் மெஷின் வைத்திருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இதில் இல்லை. எங்கே சென்றாலும் உங்களுடைய கைரேகையைக் கொண்டு மட்டுமே பணம் செலுத்திவிட்டு வரலாம்.
கையில் மொபைல் இருக்க வேண்டும், இன்டர்நெட் வேண்டும் என்ற அவசியம் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு இல்லை. இதுமட்டுமின்றி கார்டு நிறுவனங்கள் மற்றும் பி.ஓ.எஸ் மெஷின்களுக்கான சேவைக் கட்டணமும் இதில் கிடையாது. பி.ஓ.எஸ் மெஷின்களை விடவும் மொபைல்போன்கள் நடைமுறையில் எளிதானவை.
BHIM-Aadhaar-SBI பயன்படுத்த பின்பற்ற வேண்டியவை
எஸ்பிஐயுடன் இணைக்கப்பட்ட ஆதார்
மைக்ரோ யூ.எஸ்.பி / யூ.எஸ்.பி சி-டைப் Connector கொண்ட சான்றளிக்கப்பட்ட பயோமெட்ரிக் ரீடர் (Biometri Reader)
இன்டர்நெட் கூடிய Android ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தை இணைப்பதற்கான OTG ஆதரவு
Android பதிப்பு 4.2 வெர்ஷன் அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன் வேண்டும்.
தொலைபேசியில் பயோமெட்ரிக் ரீடரை இயக்கும் திறன் இருக்க வேண்டும்.
INDIVIDUALS (RETAIL MERCHANTS): பதிவுசெய்தல் செயல்முறை முழுமையாக தானியங்கி மற்றும் தனிப்பட்ட வணிகர்களுக்கான பயன்பாடாகும். வணிகர்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து ஆப்-ஐபதிவிறக்கம் செய்து தனது ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் Credentials பயன்படுத்தி தன்னை பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்தலின் போது, வணிகர் எஸ்பிஐ உடன் பராமரிக்கப்படும் தனது வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பரிவர்த்தனை வரம்புகள் (தனிப்பட்ட வணிகர்களுக்கு)
BHIM-Aadhaar-SBI பரிவர்த்தனைகளில் பின்வரும் பரிவர்த்தனை வரம்புகள் பொருந்தும்:
நுகர்வோர் பக்கம் (பணம் செலுத்துபவர் / வாங்குபவர்)
ரூ. 2,000 / - ஒரு பரிவர்த்தனைக்கு
ரூ. 5,000 / - ஒரு நாளுக்கு ஒரு ஆதார் எண் வீதம்
ரூ. 20,000 / - ஒரு மாதத்திற்கு ஒரு ஆதார் எண்ணுக்கு
வணிகர் பக்கம் (விற்பனையாளர்)
ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு நாளைக்கு 25,000 / - ரூபாய்
ரூ. 1,00,000 / - ஒரு மாதத்திற்கு ஒரு ஆதார் எண்ணுக்கு.
No Card ... No Cash ... No Problem - SBI
With BHIM Aadhar SBI you can send or buy money with ease. No card is required for this. You don't even have to go to the bank or the ATM. Before that, let us learn about Bhim Aadhar. What is Beam Aadhar Pay App? Aadhaar Pay is the only payment facility with your Aadhaar number.
But that is not the case with Beam App. Beam App acts as an e-wallet between banks and customers. With Beam App you can send and purchase money with Aadhaar number. But it needs a smartphone with internet access. Adar Bay Ape does not need these. Read More - SBI's Top 3 Plans are for You The first specialty is simple and quick cash flow. And it is also safe to do so based on your biometric information.
Merchants also need to have a POS machine, which is mandatory for customers to have a mobile and card. Wherever you go, you can only pay with your fingerprint. Customers have no need to be mobile and have internet. There is also no service charge for card companies and POS machines. Mobile phones are easier to implement than POS machines.
To use BHIM-Aadhaar-SBI OTG support for connecting an Android smartphone and biometric device with SBI-connected Aadhaar Micro USB / USB C-Type Connector Certified Biometri Reader Internet Have more version. The phone should be capable of running a biometric reader. SBI Announces Happy Message to Home Buyers… INDIVIDUALS (RETAIL MERCHANTS): The registration process is fully automated and is for personal merchants.
Merchants must download the App from the Google Play Store and register themselves using its Aadhaar number and Biometric Credentials. At the time of registration, the merchant must select his / her bank account maintained with SBI. Transaction Limitations (For Individual Merchants) The following transaction limits apply in BHIM-Aadhaar-SBI Transactions:
Consumer Page (Payer / Buyer) Rs. 2,000 / - per transaction. 5,000 / - per day for an Aadhaar number of Rs. 20,000 / - per month for an Aadhaar number of merchant (seller) Rs. 25,000 / - per day for an Aadhaar number. 1,00,000 / - per month for an Aadhaar number.

No comments:
Post a Comment
Please Comment