1,028 அரசு மருத்துவர் காலி பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்படும்?
மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்க உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் காலி யாக உள்ள 1,028 டாக்டர் பணி யிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்பதை மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக் குநர் ஆகியோர் விளக்க வேண் டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக அரக்கோணத் தைச் சேர்ந்த டாக்டர் வி.ஜெயச் சந்திரன், ராஜபாளையத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ரம்யா வர லட்சுமி, தருமபுரியைச் சேர்ந்த டாக் டர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டோடர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:
அரசு மருத்துவமனைகளில் காலி யாக உள்ள 1,884 டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளி யானது. இதற்காக நடத்தப்பட்ட தேர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 30 என்றும், மற்ற பிரிவினருக்கு 35 மதிப்பெண் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தேர்வில் நாங்கள் அனைவரும் 48 முதல் 53 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும் எங்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை.
அரசு டாக்டர்களாக 2 ஆண்டுகள் பணியாற்றினால் முதுநிலை படிப் புக்கான சலுகை மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் சிலருக்கு மட்டும் அரசு டாக்டர்களாக நியமனம் வழங்கப் பட்டுள்ளது. 2018-ம்ஆண்டு அறிவிக் கப்பட்ட 1,884 பணியிடங்களில் 856 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட் டுள்ளன. 1,028 பணியிடங்கள் இதுவரையிலும் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டுக்கு வரும் ஜூன் மாதம் தேர்வு நடத்தப் படும் என மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற எங்களுக்கு பணி வழங்காமல், புதி தாக தேர்வு நடத்துவது சட்டவிரோ தம் என அறிவிக்க வேண்டும். 2018-ல் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு கவுன் சிலிங் நடத்தி அரசு டாக்டர்களாக பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜராகி வாதிட் டார். அதையடுத்து நீதிபதி, ‘கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின்படி, காலியாக உள்ள 1,028 அரசு டாக்டர் பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்பதை மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மற்றும் பொது சுகா தாரத் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3-க்கு தள்ளிவைத்துள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment