பொதுத்தேர்வில் குளறுபடிகளை தவிர்க்க புதிய நடைமுறை
தனித்தேர்வர்களுக்கு நடப்பாண்டில் பிரத்யேக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு
பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர் வர்களுக்கு நடப்பு ஆண்டில் பிரத் யேக தேர்வு மையங்கள் அமைக்கப் படுவதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலை யில் பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு நடப்பு ஆண்டில் பிரத்யேக தேர்வு மையங்கள்i அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கமாக பொதுத்தேர்வின் போது பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து எழுதும் வகையில்தான் தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
ஆனால், நடப்பு ஆண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதுவார்கள்.
அதேநேரம் தனித்தேர்வர்களில் பலர் பழைய பாடத்திட்ட அடிப் படையில் தேர்வு எழுதுவர். இதனால் இருதரப்புக்கும் வினாத் தாள்களை பிரித்து வழங்கு வதில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப் புள்ளது. இதைத் தவிர்க்க தனித் தேர்வர்களுக்கு பிரத்யேகமாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதும் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘பிங்க்’ நிறத்திலும், பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு நீல நிறத் திலும் முகப்புச்சீட்டு கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். அதே போல், கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வியுற்ற பாடங் களில் மறுதேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு மஞ்சள் நிறத் தில் முகப்புச்சீட்டு கொண்ட விடைத் தாள்கள் வழங்கப்படும். தேர்வு மையங்களும் தனித்தனியாகவே அமைக்கப்படும்

No comments:
Post a Comment
Please Comment