ஏப்ரல் 15 முதல் 25-ம் தேதி வரை
தி.மலையில் ராணுவத்துக்கு ஆட்தேர்வு முகாம்
புதுச்சேரி உட்பட 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் ராணுவ பணிக்கு ஆட்தேர்வு முகாம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மூலம் ராணுவ பணிக்கு ஆட்தேர்வு முகாம் திருவண்ணாமலையில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது.
பின்னர், சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர் கர்ணல் தருண், ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராணுவ பணிக்கு ஆட் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச் சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். பதினேழரை வயது முதல் 23 வயது வரை தகுதி உள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் கால்நடை உதவியாளர், சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர் மற்றும் தொழில்நுட்பம், சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்தேர்வு செய்யப்பட உள்ளனர்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். ராணுவ ஆட்தேர்வு முகாமில் கலந்துகொள்வதற்கான அடையாள அட்டை, மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் மூலம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்) கொண்டு வர வேண்டும்.
உடல் தகுதி தேர்வில் 1.6 கி.மீ., தொலைவு ஓட்டப்பந்தயம், 9 அடி கால்வாய் தாண்டுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் போன்ற உடல் தகுதி தேர்வுகள் நடத்தப் படும்” என்றனர்.


No comments:
Post a Comment
Please Comment