குடற்புழு நீக்க மாத்திரை மார்ச் மாதம் வழங்கப்படும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குடற்புழு நீக்க மாத்திரை மார்ச் மாதம் வழங்கப்படும்

குடற்புழு நீக்க மாத்திரை மார்ச் மாதம் வழங்கப்படும் 

தமிழகத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மார்ச் மாதம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10-ம் தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு ‘அல்பெண்டசோல்' எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 

இந்த ஆண்டு தமிழகத்தில் 90 வயது வரை உள்ள அனை வருக்கும் குடற்புழு நீக்க மாத்தி ரைகளை வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்தது. சுமார் 7.5 கோடிக்கும் அதிகமானோருக்கு மாத்திரை வழங்க வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணி யில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை ஈடுபடுத்த திட்ட மிடப்பட்டது. மாத்திரை தட்டுப்பாடு ஏற்பட்ட தால், குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு சுகாதாரத் துறை ஒத்திவைத்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள அனை வருக்கும் குடற்புழு மாத்திரை வழங்கப்படும். இந்த ஆண்டு 90 வயது வரையுள்ள அனை வருக்கும் மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் அவ்வளவு மாத்திரை கொள்முதல் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட் டது. 90 வயது வரையுள்ள அனை வருக்கும் மாத்திரை வழங்குவது கைவிடப்பட்டது. 

முதல் தவணையாக 1 வயது முதல் 19 வயதுள்ளவர்களுக்கு வரும் மார்ச் மாதம் மாத்திரை வழங்கப்படும். இரண்டாம் தவ ணையாக செப்டம்பர் மாதம் மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

No comments:

Post a Comment

Please Comment