ஜெயலலிதா பிறந்த நாளான
பிப்.24 ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்’
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ஆண்டுதோறும் 'மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக' அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள் ளார். ஆதரவற்ற பெண் குழந்தை கள் பாதுகாப்புக்கு 5 புதிய திட்டங் களையும் அவர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110-வது விதியின்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்.
புதுமையான திட்டங்களை தீட்டியவர்
அன்னை தெரசாவால் பாராட்டப் பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாது காப்புத் திட்டம், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடை கள், பெண் கல்வியை ஊக்குவிக்க ஊக்கத் தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களை உள் ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங் கள் அமைத்தல் போன்ற புதுமை யான திட்டங்கள் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிமுக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை, 'மாநில பெண் குழந்தை கள் பாதுகாப்பு நாளாக' அனு சரிக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆதர வற்ற பெண் குழந்தைகளின் நல் வாழ்வுக்கான 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தலா ரூ.2 லட்சம்
பெற்றோர், பாதுகாவலர்கள் இல்லாமல் அரசு இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவில் தலா ரூ.2 லட்சம் அவர் களது பெயரில் வங்கியில் செலுத் தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க் கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இத்தொகை உதவியாக இருக்கும்.
18 வயதுக்குப் பிறகு அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து வெளியேறும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால் தாய், தந்தை நிலையில் இருந்து தமிழக அரசு உதவும். இதற்காக ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை அரசு வழங்கும்.
50 வயது வரை உதவி
இதில் மேற்படிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலை வாய்ப்பு, சுயதொழில் போன்றவை அடங்கும். 50 வயது நிறைவடையும் வரை இந்த உதவி வழங்கப் படும்.
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோ ருக்கு மாதந்தோறும் வழங்கப் படும் ரூ.2 ஆயிரம், இனி ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். இது, 5 ஆண்டுகளுக்கு வழங்கப் படும்.
பெண் சிசு கொலையைத் தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை நாட்டிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் ஜெய லலிதா.
தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரியைவிட குறைவாக உள்ளது.
எனவே, குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிக்க சிறப்பாக செயல்படும் முதல் 3 மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்.
சமூக நலம், சமூக பாதுகாப்புத் துறைகள், சத்துணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களில் அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகள் முன் னுரிமை அடிப்படையில் பணி யமர்த்தப்படுவர்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment