பிப்ரவரி 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிப்ரவரி 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு

பிப்ரவரி 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 

விழுப்புரம்‌ மாவட்டம்‌, மேல்மலையனூர்‌ வட்டம்‌ மற்றும்‌ நகரம்‌, அருள்மிகு அங்காளம்மன்‌ திருக்கோவிலில்‌ எதிர்வரும்‌ 28.02.2020 அன்று நடைபெறவுள்ள திருத்தேர்‌ உற்சவத்தை முன்னிட்டு 

28.02.2020 அன்று ஒரு நாள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கும்‌ உள்ளுர்‌ விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

மேற்படி தினத்தில்‌ அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம்‌ மாவட்ட கருவூலகமும்‌ மற்றும்‌ சார்நிலைக்‌ கருவூலகங்களும்‌ குறைந்த பணியாளர்களைக்‌ கொண்டு இயங்கும்‌. 

மேலும்‌, மாணவ/மாணவியர்களுக்கு 28.02.2020 அன்று பள்ளி இறுதித்‌ தேர்வுகள்‌ நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின்‌ அந்த தேர்வுகள்‌ அன்றைய தேதியில்‌ வழக்கம்போல்‌ நடைபெறும்‌ எனவும்‌, உள்ளுர்‌ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 28.02.2020-க்குப்‌ பதிலாக 14.03.2020 (சனிக்கிழமை) பணிநாள்‌ எனவும்‌ அறிவிக்கப்படுகிறது.



School and College Holidays on February 28: Collector's Action Announcement


Ammawatta Collector has announced the local holiday in Villupuram district on the 28th. In a statement issued by him, he said: Villupuram district, Uppermalayanur circle and city, 

Arulmikku Angalamman Thirukovil will be held on 28.02.2020 for the one day Pirikkadar festival in Villupuram district and all government offices in Villupuram district. Declared as a holiday. The Villupuram District Treasury and the Reliance Treasury are running low staff to look after emergencies on that day. 

Further, if the date of school final examinations is fixed for students / students on 28.02.2020, those examinations will be held as usual on that date and 14.03.2020 (Saturday) instead of 28.02.2020 as the local holiday has been declared.

No comments:

Post a Comment

Please Comment