இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி?

இஸ்ரோ யுவிகா இளம் விஞ்ஞானி : விண்ணப்பம் செய்வது எப்படி?


இஸ்ரோ இளம் விஞ்ஞானி: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து விட்டீர்களா? இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம்: 

கோடை விடுமுறை நாட்களில் (மே 11-22, 2020) இந்த யுவிகா இளம் விஞ்ஞானி திட்டம் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகளின் அனுபவ பகிர்வு, விண்வெளி நிபுணர்களுடனான கலந்துரையாடலுக்கான பிரத்யேக அமர்வுகள், நடைமுறை மற்றும் கருத்து அமர்வுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டங்களை உள்ளடக்கிய யுவிகா திட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாநில / யூனியன் பிரதேசத்திலிருந்து தலா 3 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியாக 5 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இளம் விஞ்ஞானி திட்டம் : வருங்கால அப்துல் கலாம்களை அழைக்கும் இஸ்ரோ யார் விண்ணபிக்கலாம்: 8 ஆம் வகுப்பு முடித்து, தற்போது 9 ஆம் வகுப்பில் (2019-20 கல்வியாண்டில்) படிப்பவர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள். 

எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்: தேர்வு 8 ஆம் வகுப்பு கல்வி செயல்திறன் அடிப்படையிலும், கூடுதல் சிறப்பு தகுதிகள் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதலாக 15% மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நடத்தும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி: 

ஸ்டேப் 1: isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். 

ஸ்டேப் 2: முகப்புப்பக்கத்தில், 'யுவிகா இளம் விஞ்ஞானி' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். 

ஸ்டேப் 3: 'ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன்' என்பதை கிளிக் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 4: கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும் (உங்கள் பெயர், இ-மெயில் ஐ.டி) பின், உங்கள் இ-மெயிலுக்கு வரும் ஒன்-டைம் பாஸ்வேர்ட்டை செலுத்தி உள்நுழைய வேண்டும். 

ஸ்டேப் 5: உள்நுழைந்த பிறகு, கேட்கப்படும் இதர விவரங்களை நிரப்பி, உங்கள் புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும். 

மார்ச் 30 ஆம் தேதி வெளியிடப்படும் : தற்காலிகமாக தேர்ந்ட்தேடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வரும் மார்ச் மாதம் இரண்டாம் தேதி அன்று அறிவிக்கப்படும். 

தற்காலிகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை மார்ச் 23 அல்லது அதற்கு முன்னர் மாணவர்கள் பதிவேற்ற வேண்டும். 

தொடர்புடைய சான்றிதழ்களை சரிபார்த்த பிறகு இறுதி தேர்வு பட்டியல் மார்ச் 30 அன்று வெளியிடப்படும், ' என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ISRO UVICA Young Scientist: How to Apply


ISRO Young Scientist: Have you applied for the UVICA Young Scientist Program run by the Indian Space Research Organization (ISRO)? ISRO Young Scientist Project: 

This UVICA Young Scientist Project is being held during the summer holidays (May 11-22, 2020). It also includes scientists' experience sharing, exclusive sessions for discussion with aerospace experts, practical and opinion sessions. 

The application process will go on till the 24th of February. Each of the 3 students from each state / union area will be selected to participate in the UVICA program, which includes CBSE, ICSE and state curriculum. Five additional seats are reserved for students of Indian origin. 

Young Scientist Program: ISRO invites prospective Abdul Kalam: Those who have completed 8th grade and are currently studying in 9th grade (academic year 2019-20) are eligible for this program. Students are selected on the basis of Exam 8th grade academic performance and additional special qualifications. 

Students from rural areas are given an additional 15% marks. How to Apply for the UVA Young Scientist Program run by the Indian Space Research Center (ISRO) 

Step 1: Go to the official website isro.gov.in

Step 2: On the homepage, you have to click on the link 'Yuvika Young Scientist'. 

Step 3: Click on 'Online Registration' 

Step 4: Fill in the requested details (your name, e-mail id) and then enter the one-time password for your e-mail and sign in. 

Step 5: After logging in, you will be asked to fill in the rest of the information and upload your photos Published on March 30: The list of provisionally selected students will be announced on the second of March. 

Temporarily, selected students must upload copies of their certificates on or before March 23. "After verifying the relevant certificates, the final exam list will be released on March 30," the official said.

No comments:

Post a Comment

Please Comment