ஆதார் எண்ணுடன் பான் கார்டுகளை இணைப்பது கட்டாயம் ( கடைசி தேதி - மார்ச் 31 )
மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31க்குப் பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது,
பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 31ம் தேதிக்குப் பின் ஆதாரை பான்கார்டுடன் இணைத்தால் மீண்டும் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன.
மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன.
ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது
சேதம் அடைந்தாலோ புதிதாக மாற்று பான் கார்டையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். ஆதார் கார்டு அடிப்படையில் இது வழங்கப்படும்.
ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித்துறையில் இருந்து விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். அதை பயன்படுத்தி விண்ணப்பதாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
பின்னர் புதிய இ-பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள்தான் பான் கார்டிலும் இடம்பெறும்.
Attachment of PAN Cards with Aadhaar Number (Last Date - March 31)
It has been announced that PAN cards of the Income Tax Department that are not affiliated with Aadhaar number will not be valid by March 31. The Income Tax Department has announced that it is likely to take action against non-Aadhaar-linked bank cards after March 31 for non-use of PAN numbers. The Income Tax Department said that if the source is attached to the bank card after March 31, the bank card number could be used again.
The Income Tax Department has announced that the deadline for linking PAN card with Aadhaar has been extended several times. About 31 crore PAN cards have already been linked to Aadhaar.Another 18 crore pancards are to be added. The Income Tax Department has introduced online PAN Card facility. Those who already have a PAN card can get a replacement PAN card if it is lost or damaged. This electronic PAN Card (e-PAN) will be issued to the applicant at no charge.
It will be issued based on Aadhaar card.After verifying the details of the Aadhaar card, the password will be returned to the applicant's mobile number from the Income Tax Department. Applicants can check their PAN card details using it. Then you can get the new e-PAN card. Provided on Aadhaar basis, the PAN card will include the photo, name, father's name and address information in the source.

No comments:
Post a Comment
Please Comment