5 நாட்கள் நடக்கிறது
ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 3-ந்தேதி தொடங்குகிறது
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி) நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (நிலை-1) எழுதுவதற்கு தென் மண்டலத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 958 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கணினி வழியில் நடத்தப்படவுள்ள இத்தேர்வு மார்ச் 3, 4, 5, 6 மற்றும் 9-ந்தேதிகளில் தினமும் 3 ஷிப்டுகள் வீதம் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், புதுச்சேரி, ஆந்திராவில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், கர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினம், வைசியநகரம், ராஜமுந்திரி, காக்கிநாடா, சிராலா, தெலுங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர், வாரங்கல் உள்பட 21 நகரங்களில் உள்ள 44 மையங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச்சீட்டு தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பு தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு அனுமதிச்சீட்டு மற்றும் செல்லத்தக்க அசல் அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட தகவல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment