குரூப்-4 காலி பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-4 காலி பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு

சமீபத்தில் தேர்வு முடிவடைந்த நிலையில் குரூப்-4 காலி பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு
டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுத் துறைகளில் 2018-19, 2019-20-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் அன்றைய நிலவரப்படி 6,491 என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் இருந்து புதிதாக பணியிடங்கள் பெறப்பட வாய்ப்புள்ளது என்றும், இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது என்றும், எந்த நேரத்திலும் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சில துறைகளில் இருந்து பெறப்பட்ட காலி இடங்களை கணக்கில் கொண்டு, 25.11.2019 அன்று 9,398 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 484 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 9,882 காலி இடங்களாக அறிவிக்கப்படுகிறது.
காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன்னர் நடந்த குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வுகளிலும் நடந்துள்ளன. தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள 9,882 காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குரூப்-4 தேர்வில்தான் முறைகேடு நடந்து தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் குற்றவாளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Group-4 vacancies increased to 9,882 at the end of the recent exam
Tienpiesci In a statement issued yesterday:
The vacancies for public sector departments for 2018-19 and 2019-20 were announced as 6,491. It was reported that new hires were likely to be recruited from each department and that the number of vacancies would be approximate and would be changed at any time.
Based on this, the number of vacant seats received from certain sectors was increased to 9,398 on 25.11.2019. Currently, an additional 484 seats have been increased and 9,882 vacant seats are announced.
The number of vacant workplaces is mostly regular. Previously, Group-1, Group-2, Group-2A, and the selection of Integrated Engineer jobs have taken place. Discussions for the 9,882 vacancies currently underway will be released shortly.
It has been stated thus
This is the Group-4 exam which is currently being abused by CBCIT. It is noteworthy that the police are investigating.

No comments:

Post a Comment

Please Comment