குரூப்-4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குரூப்-4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு

குரூப்-4 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 39 பேர் அழைப்பு 

குரூப் 4 தேர்வு முறைகேட் டில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வர்களுக்கு மாற்றாக, புதிதாக 39 பேரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு டிஎன்பிஎஸ்சி அழைத்துள்ளது. 

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 4 பணிக்காக நடைபெற்ற தேர்வில், ராமநாதபுரம் மாவட் டத்தின் ராமேசுவரம் மற்றும் கீழக் கரை மையங்களில் தேர்வெழு திய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 39 பேர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்து தேர்ச்சி பெற்ற விவகாரம் சர்ச்சையானது. 

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி மேற்கொண்ட விசாரணையில் இடைத்தரகர்கள் உதவியுடன் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது. அதன்பின் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதிநீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது. இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மாற் றாக தரவரிசையின்படி சான் றிதழ் சரிபார்ப்புக்கு புதிதாக தேர்வான 39 பேர்களின் பட்டி யலை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 

 இதையடுத்து குரூப் 4 பணிக் கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று (பிப். 1) தொடங்கி பிப்.7-ம் வரை நடைபெற உள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் அவரவர் பகுதி களில் உள்ள இ-சேவை மையங் களில் தங்கள் சான்றிதழ்களை இணையதளம் வழியாக பதி வேற்றம் செய்ய வேண்டும்.

 சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறும் தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வர்களின் செல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரி விக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் இன்று (பிப்.1) தொடங்கி பிப்.7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment