பிஎச்.டி பட்டங்களை சமர்ப்பிக்க அண்ணா பல்கலை. உத்தரவு
தனியார் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் தொடர்பான ஆவணங்களை மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப் பிக்க அண்ணா பல்கலை. உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல் கலைக்கழகம் சார்பில் அனுப்பப் பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தனியார் கல்லூரி களில் பணிபுரியும் சில பேராசிரி யர்கள் போலி பிஎச்.டி. சான்றி தழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந் துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இதுதவிர, கணிசமான வர்கள் தவறான ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை அளித் தும் பேராசிரியர், விரிவுரையா ளர் பணியில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
எனவே, தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர், பேராசிரியர் தேர்வின்போது பட்டதாரிகளின் சான்றிதழ் விவரங்களை முழுவ துமாக பரிசோதித்த பிறகே பணியில் சேர்க்க வேண்டும். தங்கள் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் உண்மையானதுதான் என்பதற் கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, அண்ணா பல்கலை.யில் மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Anna University to submit PhD degrees. Directive
Ph.D., obtained by private college professors. Degree papers to be submitted by March 16 Uttara has left. In a letter sent to all private engineering colleges, Anna Dental University said: It has been reported that the submission of the certificate has been completed. In addition, a significant number of professors have entered the work of lecturer giving false Aadhaar number and PAN number. Therefore, the lecturer in private colleges should include the graduates' certification details at the time of professor's examination, after thorough examination. PhDs received by their college professors. The certification that the degree is genuine must be obtained from the respective Universities and submitted by March 16 at Anna University. It is stated thus.

No comments:
Post a Comment
Please Comment