5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 'ஆதார்' பெறுவது எப்படி ?
வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றிற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெற முடியும். அதற்கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம்.
ஆதார் அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பெற்றோர் தங்களின் ஆதார் அட்டையுடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சேர்த்து கொடுக்க வேண்டும். நகல் மட்டும் இல்லாமல் அசல் சான்றிதழ் எடுத்துச் செல்வது உகந்தது.
5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கை ரேகை, கருவிழிப்படலம் பதிவு செய்யப்படாது. அவர்களுக்கு நீல நிறத்திலான பால் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தைகளின் ஆதார் எண், பெற்றோரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்.
குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பெற்றோர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை, பள்ளியில் இருந்து பெற்றப்பட்ட சான்று (Bonafide) ஆகியவற்றை ஆதார் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்அப்போது குழந்தையின் கைரேகை, கருவிழிப்படல பதிவு எடுக்கப்படும்.
அந்த விவரங்கள் குழந்தையின் ஆதார் தகவலில் சேர்க்கப்படும். அதற்கு பிறகு குழந்தைக்கு 15 வயதாகும் போது மீண்டும் கைரேகை, கருவிழிப்படல பதிவு செய்யப்படும். அப்போது பெற்றோரின் ஆதார் அட்டையும் அவசியம்.
How do children under 5 get 'Aadhaar'?
Must be 18 years old for voter card and driving license. But there is no age limit for obtaining Aadhaar card in our country. Even a newborn child can get an Aadhaar card. Let us look at the procedures. Parents need to go to the Aadhaar card issuance center and fill in the application form along with the birth certificate of the child. It is advisable to carry the original certificate without a copy.
They will be given a blue Milk Adhar card. The child's Aadhaar number will be linked to the parent's Aadhaar number. After the child is 5 years old, the parent has to submit the child's birth certificate, school identification card and Bonafide to the Aadhaar Center. Those details will be included in the child's Aadhaar information. After that, the baby will be 15 years old again and the fingerprint and iris will be recorded. Then you need your parents' Aadhaar card.

No comments:
Post a Comment
Please Comment