இன்றைய செய்திகள் 6.02.2020(வியாழக்கிழமை) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 6.02.2020(வியாழக்கிழமை)

இன்றைய செய்திகள் 6.02.2020(வியாழக்கிழமை)




🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் பதில்
🎀🎀ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ.25 கோடி பறிமுதல்
🎀🎀ஆசிரியர் வாரிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்த‌தா என ஆய்வு செய்யப்படும்
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கைதானவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
🎀🎀அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சுதந்திரமாக செயல்படும்
- பிரதமர் மோடி
🎀🎀வருகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு
ஜிஎஸ்டி லாட்டரி: ரூ.1 கோடி வரை பரிசு பெற வாய்ப்பு
சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகம் செய்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி லாட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கடையில் பொருட்கள் வாங்கும் போது, பில் வாங்கினால் அந்த பில்லில் இருந்து பொருள் வாங்கியவர்களுக்கு லாட்டரி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், ரசீது கேட்டு வாங்க வேண்டும். இதை ஊக்குவிக்க, புதிய 'ஜி.எஸ்.டி., லாட்டரி' திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நுகர்வோர், பொருட்கள் வாங்கும் போதும் சேவைகளை பெறும்போதும், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரை வரி செலுத்துகின்றனர்.*

இந்த வரி செலுத்தப்பட்ட ரசீதை ஒருவர், மத்திய அரசு அறிவிக்க உள்ள, லாட்டரி சீட்டு வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். அவற்றின்படி, குலுக்கல் முறையில், வெற்றி பெற்றோர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, 10 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மின்னணு முறையில், குலுக்கல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும்.
🎀🎀ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கக்கோரும் வழக்கில் பதிலளிக்குமாறு பேரவைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
🎀🎀தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? என மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
🎀🎀2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் நகைகளை ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
🎀🎀டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
🎀🎀இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டிகளில், வாழ்வதற்கு உகந்த மாநகரங்கள் பட்டியலில் தற்போது நெல்லை முதலிடத்தில் உள்ளது.
🎀🎀தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🎀🎀கரோனா வைரஸ் குறித்து பயத்தைப் பரப்பும் அமெரிக்கா அதனைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது என்று சீனா தெரிவித்துள்ளது
🎀🎀மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால் அதனை பாகிஸ்தான் ஈடு செய்யும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.       🎀🎀அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல்  நடைபெறவுள்ளது
🎀🎀Group 2A தேர்வு முறைகேடு - விசாரணை குறித்து அறிக்கை வெளியீடு
🎀🎀TRB - கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு - 119 மையங்களில் விசாரணை தேவை - தேர்வர்கள் வலியுறுத்தல்
🎀🎀பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் - மாநகராட்சி நிர்வாகம்  ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

🎀🎀மதுரை மாவட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் நடைபெற்ற  கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று பேருந்து  விட்ட அதிகாரிகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment