கருப்பு திராட்சை மருத்துவ குணங்கள்.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கருப்பு திராட்சை மருத்துவ குணங்கள்..

கருப்பு திராட்சை மருத்துவ குணங்கள்..



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த பழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தை விருந்தாக்கி உள்ளதை மருந்தாக்கி உள்ளனர். 

சிறப்பு விருந்தில் முக்கியப் பங்கு திராட்சைக்கு உண்டு. திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. 

ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ளலாம். 

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக திராட்சை பயன்படுத்துகின்றனர். 

முக்கியமாக பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளின் உயர்வினை அறிந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர். உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. 

அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்க நாட்டில் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

வருடத்திற்கு நான்கு மில்லியன் யூனிட்டு கள் பயன்படுத்துகின்றனர். கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவப் பணிகள் கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது. 

சத்துக் கிடைக்கும் அளவு மிகமிகக் குறைவாகும். திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீ கரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன் பாட்டில் உள்ளது. 

உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. 

ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது. 

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. 

மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.


Medicinal properties of black grapes ..



The grape is the fruit that was enjoyed by the kings from the last millennium to the last. The same is used for making wine. Rural doctors all over the country grapefruit the wine. The main part of the special dinner is the grapes. One of the biggest nutrients available in grapefruit is Pro-Cyanidin. This is called Pro-Cyanidin, Pycno Genal. This Pro contains 20 of Cyanide's grapevines. But it has 80 of its seeds. Knowing this amazing message, you can see how great loss it is to eat the flesh of the seeds.

Pro or cyanidin is only 20 of the red wines made with grape flesh. But there is 80 of the grape seeds. In the United States, they use more grapes. Mainly in France, the grape seeds have been grown and used for forty years. Research reports that France has the lowest incidence of myocardial infarction in the world. The reason for this is that they are overusing the wine of the grapes. Grape seeds rank ninth among herbal remedies in the US. Four million units are used per year. The Medical Works of Black Grape Seed Black grape seeds contain Pro or Cyanidin 80. It is also present in other fruits, vegetables and teas that we eat.

The amount of nutrients available is very low. The grape seed extract has no side effects. Grape seed extract is a natural food in Japan. There are about one lakh kg of seeds in Japan. Vitamin C in the body plays a huge role in the protection of vitamin-E. The grape seed is fifty percent more powerful than vitamin E. Twenty times more potent than vitamin-C. Blood is used as an antidote to the disease. Grapefruit reduces clogging of blood vessels and inflammation of blood vessels. Rana heals the wound of treatment. Rapidly regulates the blood flow of people with hemorrhoids.

The cholesty in the blood vessels dissolves the rale. Prevents the onset of diabetes and cataracts in the leg. Eliminates cataracts. Used to correct grievances of kidney function. Evening eye lightens the eyes. Breast cancer in women has the potential to prevent ovarian disorders. Further enhances memory. Prostate cancer in men in the old days prevents them from getting cancer.

No comments:

Post a Comment

Please Comment