வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்த வேண்டுமா ? உங்களுக்கான இயற்கை பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்த வேண்டுமா ? உங்களுக்கான இயற்கை பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகள்!

வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்த வேண்டுமா ? உங்களுக்கான இயற்கை பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகள்!



வயிற்றுப்புண்களால் அவதிப்படுபவர்கள் ஏரளாமானோர். சிலர் காலையில் உணவு உண்ணாமல் அல்சர் நோய் வந்து அவதிப்படுகின்றனர். சிலர் வயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கான எளிமையான பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகளை இங்கு காணலாம். 

தினமும் உணவு உண்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு 2 ஸ்பூன் தேன் குடித்து வரலாம். தொடர்ந்து மூன்று வேலையும் 10 தினங்கள் குடித்து வந்தால் உங்கள் வயிற்றுப்புண் சரியாகிவிடும். கடுமையாக வயிற்றுவலி உள்ளவர்களுக்கு இந்த முறையை பாலோ செய்யலாம். 

சூடான தண்ணீர் 1 கப் எடுத்துக்கொள்ள வேண்டும், பின்பு அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நன்கு கலக்கி கொஞ்சம் ஆறியவுடன் எடுத்து குடித்தால் வயிற்றுவலி நீங்கும், ஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும் வயிற்றில் எரிச்சல் மற்றும் வயிற்றில் இரைச்சல் உங்களுக்கு இருக்குமானால் 

நீங்கள் தேனை குடிக்கலாம். இது விரைவில் உங்களுக்கு வயிற்று சத்தத்தையும், எரிச்சலையும் குறைத்து விடும். இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெறும் பாத்திரத்தில் போட்டு சிவக்கும் படி வறுக்கலாம். பின்பு ஒரு கப் நீரையும், 1 ஸ்பூன் தேனையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளலாம். 

பின்பு இதை வடிகட்டி குடித்தால், வயிற்று பேதி நின்று விடும். அகத்திக்கீரையைக் காம்புகள் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி அதை நன்கு வேக வைக்கலாம். பின்பு இதன் சாறை தனியாக எடுத்து பிழிந்து கொள்ளலாம். 

அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து கலக்கிக் குடிக்கலாம். இதை செய்தால் எந்தவிதமான வயிற்று கோளாறுகளும், வயிற்று புண்களும் குணமடைந்து விடும். நெல்லிக்காய்களைத் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். 

பின்பு அதில் தேன், ஏலக்காய் மற்றும் ரோஜா இதழ்கள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நாட்கள் வர வெயிலில் காய வைக்கலாம். இதை தினமும் 2 ஸ்பூன் தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று வலி மற்றும் தொடர்ச்சியான இருமல் பிரச்சனை குணமடைய செய்யும்.


Want to heal ulcers in the stomach? Natural Grandmothers Medical Tips For You!


People suffering from diarrhea are numerous. Some people suffer from ulcer disease in the morning without eating. Some people suffer from abdominal pain. Don't worry anymore. Here are some easy granny medical tips. Drink 2 teaspoons of honey 2 hours before the meal. If you drink three consecutive days for 10 days, your stomach will be fine. For those with severe diarrhea, this method can be poloed.

Take 1 cup of warm water, then mix 1 tablespoon of honey with it. You can drink honey if you mix it well and drink it with a little cure. This will quickly reduce your stomach aches and irritations. Cut the ginger into small pieces and put them in a pan. Then boil it well with a cup of water and 1 tsp honey.After drinking this, the stomach will stop. 

The stem should be removed and cleaned. Then water it and boil it well. It can then be extracted separately. You can mix it with the required amount of honey. Doing this will cure any stomach problems and stomach ulcers. Gooseberry can be cut into small pieces. Then add honey, cardamom and rose petals and let it dry for two days. Continuing this with 2 tbsp daily can cure stomach pain and persistent cough.

No comments:

Post a Comment

Please Comment