ரயில்வே ஊழியர்களுக்கான புதிய செயலி
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில்வே துறையை கணினிமயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 11.19 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களின் தகவல்கள், ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை உடனுக்குடன் பெறுவதில் சிக்கல் இருந்து வருகிறது.
எனவே, ரயில்வே ஊழியர்கள் பணிக்கு சேர்ந்த நாள், பதவி உயர்வு, விருதுகள் பெற்றது, பணியிடமாற்றம், விடுப்பு மற்றும் பயிற்சி, ஓய்வுகால பலன்கள், ஓய்வூதியம் போன்ற தகவல்களை உடனுக்குடன் பெறும் வகையில் மத்திய ரயில்வே தகவல் மையம் மூலம் புதியதாக எச்ஆர்எம்எஸ் (HRMS) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செல்போன் செயலியை ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் புதுடெல்லியில் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஊழியர்கள் இந்த செயலியை பயன்படுத்தும்போது, முதல்முறையாக தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் பதிவு செய்திருக்கும் செல்போனுக்கு ஓடிபி எண் வரும். வெளிப்படையான நிர்வாகத்துக்கும், இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment