பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு
தேனி : மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் 20 மாணவருக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் வீதம் குலுக்கல் முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 2 ல் துவங்கி 24 ல் முடிகிறது.
பிளஸ் 1 தேர்வு மார்ச் 4 ல் துவங்கி 26 லும், பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13 ல் முடிகிறது. மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வினை 45 ஆயிரத்து 331 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத 52 மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 5 மையங்கள் அமைக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 65 மையங்களும், 4 மையங்கள் தனித்தேர்வர்களுக்கு அமைக்கப்படுகிறது.
தேர்வு எழுதும் 20 மாணவர்களுக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.புதிய நடைமுறைதேனி மாவட்டத்தில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் நியமிக்கப்பட்டனர். இதில் சர்ச்சை உருவானது.
இந்த ஆண்டு முதல் மாவட்டத்தில் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. கல்வி மாவட்ட வாரியாக தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை வரவழைத்து தேர்வு மைய எண் குறிப்பிட்டு குலுக்கல் முறையில் சீட்டு எடுக்க வேண்டும்.
எந்த எண் சீட்டு வருகிறதோ அந்த மையத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கான குலுக்கல் நாளை( பிப். 26 ல்) நடக்கிறது. அதன்பின் தேர்வு மையத்தில் உள்ள அறைகளுக்கும் தேர்வு நாளன்று காலையில் குலுக்கல் நடத்தி கண்காணிப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 720 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்விற்கு 806 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இது தவிர பறக்கும் படையினர் பணி ஒதுக்கப்பட்ட பள்ளியில் இருந்து தேர்வு முடியும் வரை தொடர் கண்காணிக்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி கூறுகையில், '' தேனி மாவட்டத்தில் அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் நடைமுறை நியமிக்கப்படுவார்கள். இதனால் தேர்வு நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும்,'' என்றார்.
General election room monitors decide to shake
Theni: 20 students will be appointed as the superintendent of a room in the state general election in the district. The Plus 2 government election will begin on March 2 and end on the 24th. The Plus 1 exam starts on March 4 and ends on March 26 for the 10th grade and ends on April 13. 45 thousand 331 students and students write the government general election in the district. There are 52 centers for Plus Two students to choose from and 5 centers for independents. There are 65 centers for 10th grade students and 4 centers for private candidates. A room superintendent is to be appointed for the 20 students who write the exams. Controversy ensued.
The new practice comes into force in the district this year. Teachers who work in the district-wise selection of education should be summoned and marked by the center number of the exam and the voting system. Any number of tickets will be assigned to the center. The shakeup for this is going on tomorrow (Feb. 26). The superintendent will be assigned to the rooms in the selection center and will be assigned by the superintendent on the morning of the day of selection. 806 candidates will be appointed for the 10th class examination. Apart from this, the flying squadron should be monitored continuously until it can be selected from the assigned school. Chief Education Officer Renukadevi said, This will make the selection process transparent, ”he said.

No comments:
Post a Comment
Please Comment