' Opportunity ' என்பது என்ன? ஒரு உளவியல் பார்வை
காலை எழுந்தவுடன் காபி, காலை கடன்கள், அன்றைய நாளிற்கான ஆயத்த பணிகள். என்றாவது வாழ்க்கை வழங்கியிருக்கும் ஆகச்சிறந்த வாய்ப்புகளை நினைக்கவும், உபயோகிக்கவும் தவறியிருக்கிறோம் என்று எண்ணியதுண்டா...?
இன்று காலை எழுந்திருக்கிறோம். நாம் உயிரோடு கண்விழித்திருக்கிறோம் என்பது எவ்வளவு பிரமாண்டமான வாய்ப்பு? "மனிதராக பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்" என்கிற கூற்றெல்லாம் வெறும் பழமையான வரிகள் அல்ல. இன்று கார்பரேட் உலகமும், தொழில் யுகமும் கொண்டாடி தீர்க்கும் நவீன மேலாண்மை அது.
மனிதராக பிறப்பது எந்த மாதிரியான வாய்ப்புகளையெல்லாம் நமக்கு வழங்கியிருக்கிறது ? உலகின் ஆச்சரியங்களை, ஒவ்வொறு நொடியிலும் புது புது அனுபவங்களை வாய்ப்பாக நமக்கு வழங்கி அதில் நம்மை திளைக்க செய்வது தான் இவ்வாழ்க்கை.
தேடல், கற்றல், புதுமையை புதுக்குதல், வித்தியாசமான முயற்சி, ஏராளமான செய்திகள், கற்பனை, ரசனை, விளையாட்டு, ஆய்வு என ஏராளமான விதத்தில் வாய்ப்புகள் மாறுவேடமிட்டு வருவது இந்த மனித வாழ்க்கையில் மட்டும்தான்
ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தொடர்பில் இருப்பதென்பது எத்தனை உயர்ந்த வாய்ப்பு என என்றேனும் எண்ணியதுண்டா...?
ஒருவரின் வலியில், துயரத்தில், பங்கேற்பது.
ஒருவர் மீது அன்பும் அக்கறையும் செலுத்துவது, நம்மால் மற்றொருவரின் வாழ்வை மேன்மை படுத்துகிற வாய்ப்பு இந்த மனித பிறவியில் மட்டுமே வாய்க்கும் என்ற சிந்தனை துளிர்த்ததுண்டா...?
நடைமுறை தடைகள், இடர்களை களைந்து காண்கிற எதையும் அரவணைக்கிற,
அங்கிகரிக்கிற வாய்ப்பு இந்த மனித பிறவியில் மட்டும் தான் வாய்க்கும். ஏற்றுகொண்ட வாழ்வு மேம்பட பல வாய்ப்புகளை நாமே உருவாக்க ஏதுவான வாய்ப்பை வழங்கியிருப்பது இம்மனித பிறப்பின் ஆகச்சிறந்த கொடையில்லையா?
இந்த நொடி உங்கள் சிந்தனையில் கிளர்ந்தெழும் தெளிந்த சிந்தனை அனைத்துமே வாய்ப்புகளே.
மனிதனாக பிறந்த இப்பெரும் வாய்ப்பினை வசப்படுத்த இப்போது நீங்கள் தயார் தானே...?
What is 'Opportunity'? A Psychological Perspective
Morning coffee, breakfast credits, preparations for the day. Do you think we have failed to think and use the best opportunities that life has ever offered ...? We wake up this morning. What a tremendous opportunity that we have been keeping alive. The phrase "must have made a man to be born" is not just old lines. Today it is the modern management that celebrates the corporate world and the industrial age. What kind of opportunities have we been given as a human being?
This is the opportunity to immerse ourselves in the wonders of the world, giving us new opportunities every second. Search, Learning, Innovation, Different Effort, Numerous Messages, Imagination, Taste, Sport, Study Disguise Opportunities In this human life alone, what is the highest chance that a man can relate to another man ...? Participation in one's pain, distress, and.
Is it perplexing to think that loving and caring for one person and the chance to make another person's life worthwhile will only flow in this human birth ...? Only in this human birth will the opportunity to embrace and embrace practical obstacles and risks. Isn't this the best way to give birth to the opportunity we have to create so many opportunities to improve our lives? All of these are moments of clear thinking that spark your moment. Are you ready now to take advantage of this great human birth?

No comments:
Post a Comment
Please Comment