இந்தியாவின் "கவிக்குயில்" என்று அழைக்கப்பட்ட முதல் பெண் ஆளுநர்... பிறந்த தினம்..!!
சரோஜினி நாயுடு:
இந்தியாவின் 'கவிக்குயில்" என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம்.
இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார்.
இவர் எழுதிய The Golden Threshold, The Bird of Time, The Broken wing ஆகிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை.
1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார். 1925ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்திஜி இவரை செல்லமாக 'மிக்கி மவுஸ்" என்பார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இவர் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.
பெண்களுக்கு பெருமை சேர்த்த சரோஜினி நாயுடு 1949ஆம் ஆண்டு மறைந்தார்.
20ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராக திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
Birthday of the first woman governor of India called "Kavikuyil" ... Happy Birthday .. !!
Sarojini Naidu: Sarojini Naidu was born in the Telangana State of Hyderabad on February 13, 1879, a freedom fighter called India's poetic poet. The Bird of Time, The Broken Wing Gia notable books.He joined the Indian National Freedom Movement during the partition of Bengal in 1905. He was elected president of Congress in 1925. After her independence, she was appointed governor of Uttar Pradesh and became the first woman governor. Sarojini Naidu, who made women proud, disappeared in 1949. Birthday of India .

No comments:
Post a Comment
Please Comment