சிறுமி பவதாரணிக்கு தமிழக அரசு விருது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிறுமி பவதாரணிக்கு தமிழக அரசு விருது

பெண் குழந்தை முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சிறுமி பவதாரணிக்கு தமிழக அரசு விருது முதல்வர் பழனிசாமி வழங்கினார் 

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி, பெண் குழந்தை முன் னேற்றத்துக்கான தமிழக அரசின் விருதை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ச.பவ தாரணிக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி விதி 110-ன் கீழ் சில அறி விப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி, ‘‘பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களின் முன்னேற் றத்துக்காக பாடுபட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி, ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ ஆக அனுசரிக்கப்படும்’’ என்று தெரிவித்தார். 


அதன்படி, ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளான நேற்று, தமிழக அரசின் சார்பில் ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற் றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங் களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஆண்டு தோறும் ‘பெண் குழந்தை முன் னேற்றத்துக்கான மாநில விருது’ வழங்கப்பட உள்ளது. 

 இந்த ஆண்டுக்கான பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான மாநில விருதை, கடலூர் மாவட்டம் மாலுமியர்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ச.பவதாரணிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். போஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், வாக்களிக்க மக்களை ஊக்குவித்தல், கண் தானம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டதற் காக பவதாரணிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்த விருது, ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரத்தைக் கொண்டது. மேலும், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் அவர்களின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வைப்பீட்டுத் தொகை செய்யப்பட்டதற்கான பத் திரங்களை முதல்வர் வழங் கினார். 

 அத்துடன் முதல் வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோ லைகளையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த நாளின்போது, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சித் துறை சார்பில் லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


அதன்படி, ஜெயலலி தாவின் 72-வது பிறந்த நாளை யொட்டி தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடப் பட உள்ளன. சென்னை தலை மைச் செயலகம் எதிரில் உள்ள பூங்காவில் மகிழம் மரக்கன்றை நட்டு, இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு டிசம்பருக்குள் 72 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்படும். 

வனப்பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், சாலையோரங்கள், பூங்காக்கள், பெரிய அளவிலான குடியிருப்புகள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து பாதுகாக்கப்படும். 

 தமிழகத்தின் பருவநிலை மற்றும் மண் வளத்துக்கு ஏற்ற வாறு ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வி.சரோஜா உள் ளிட்ட அமைச்சர்கள், தலமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Chief Minister Palanisamy presented the 9-year-old girl from Cuddalore district to the Tamil Nadu government's award for the birth of a baby girl.

Chief Minister Palanisamy presented the 9-year-old girl from Cuddalore district to the Tamil Nadu government's award for the birth of a baby girl. Chief Minister Palanisamy, who published some knowledge under Rule 110 on the 19th of May, said, "State Girl Child Protection Day" is the birthday of former Chief Minister Jayalalithaa, who was committed to the welfare of her children. It will be observed. ”


Accordingly, Jayalalithaa's 72nd birthday was celebrated on behalf of the Government of Tamil Nadu. In addition, the annual 'State Priority for Child Prevention' award is given to women under the age of 18 who have worked hard to prevent crimes against girls, ensure education for all girls up to the age of 18, abolish child labor and prevent child marriages. is.

 Chief Minister Palanisamy presented the State Award for Girl Child Advancement this year to the 9 year old girl from the Cuddalore district, Malumiyarpet. The award is given to the Pawarmani who has carried out various awareness campaigns such as the Poshan Abhiyan Project, Avoiding Flexibility, Encouraging People to Vote and Eye Donation.

The award carries a cash prize of Rs. In addition, the Chief Minister has given ten screenshots of the donation of Rs.

 Chief Minister Palanisamy also presented maturity checks to 7 women who are now 18 years of age in partnership with First Lady's Child Protection Program. On the occasion of Jayalalithaa's birth since 2012, millions of saplings have been implemented on behalf of the Tamil Nadu Forest and Environment Department and the Local Government Department.

According to the 72nd birthday of Jayalalithaa, 72 lakh saplings are planted across Tamil Nadu. Chief Minister Palanisamy inaugurated the project yesterday by planting a tree in the park opposite the head office of Chennai. 72 lakhs of saplings will be completed by December this year.

Trees will be planted and preserved in forests, schools, colleges, government and private office complexes, roadsides, parks and large residential areas.

 Various varieties of saplings will be planted in Tamilnadu. Deputy Chief Minister O. Pannirselvam, Dindigul Srinivasan, SP Velumani, V. Saroja, Ministers, Head Secretary K.Shanmugam and Department Secretaries and top officials participated in the event.

No comments:

Post a Comment

Please Comment