உடலுக்கு நன்மைதரும் வேர்க்கடலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உடலுக்கு நன்மைதரும் வேர்க்கடலை!

உடலுக்கு நன்மைதரும் வேர்க்கடலை!



வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. 

எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. 

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. 

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. 

இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தம் குறையும். வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். 

தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும். இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது. வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, 

வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.


Peanuts that are beneficial for the body!


Peanuts are fatty. But it's good fat. It is high in fat and protein. If you eat peanuts, the amount of sugar you get from it is very low. So sugar patients can eat peanuts generously without any fear. Magnesium in peanuts also accelerates the insulin-secreting hormones. Peanuts are rich in vitamin A and water soluble vitamin B3. These vitamins are essential for pregnant women. A baby born with a lack of these nutrients is more likely to be born with neurological disorders. Nitric acid is present in peanuts. Nitrate in the body expands the blood vessels by eating peanuts.

This will keep the blood steady and reduce the blood pressure. If you eat peanuts, the biochemicals in your body will unnecessarily throw the blood into the liver. Unnecessary items will be dumped. Antioxidants in the body eliminate unnecessary waste. Peanuts are good fats. Peanuts can be eaten raw or fried rather than eaten raw. But the peanuts should not be fried in oil. Eat without peanut skin. Because that is a lot of nutrients.

No comments:

Post a Comment

Please Comment