`தேசிய அளவிலான அரசு ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி!' - புனேவில் களமிறங்கும் சிவகங்கை பள்ளி ஆசிரியை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`தேசிய அளவிலான அரசு ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி!' - புனேவில் களமிறங்கும் சிவகங்கை பள்ளி ஆசிரியை

`தேசிய அளவிலான அரசு ஊழியர்கள் விளையாட்டுப் போட்டி!' - புனேவில் களமிறங்கும் சிவகங்கை பள்ளி ஆசிரியை



சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை கலைச் செல்வி, அரசு ஊழியர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் பங்கேற்க உள்ளார். 

இதனால் ஆசிரியை கலைச் செல்விக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.இறகுப் பந்து பயிற்சியின் போது இது குறித்து ஆசிரியை கலைச் செல்வி மகிழ்ச்சியாக நம்மிடம்...,

``எனக்கு சின்ன வயசில் இருந்து விளையாட்டின் மீது ஏகப்பட்ட பிரியம். `பெண்கள் விளையாடக் கூடாது சும்மா இரு' என்று சிலர் சொன்னாலும் விளையாட்டுக்கு வீட்டில் தடை போடல. அதனால் எல்லா விளையாட்டுகளும் நான் நல்லா விளையாடுவேன். 

போலீஸ் ஆகணும் இல்லாட்டி பீ.டி டீச்சர் ஆகணும் என்பதுதான் லட்சியம். அதன்படி உடற்கல்வி படிச்சு டீச்சராவும் ஆகிவிட்டேன். தனியார் பள்ளிகளில் வேலை பார்த்த எனக்கு அரசுப் பள்ளியில் பணிக்குச் சேர வேண்டும் என ஆசையே இல்ல. 

தனியார் பள்ளியில் மாணவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. அப்பாவின் உத்தரவால் அரசுப் பள்ளிக்கு மாறிட்டேன். பின் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை என்னை மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு விளையாட்டுக் கல்வியை கடமைக்கு கற்றுத் தராமல் சர்வீஸாகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

தற்போதும் என் மனசுக்குப் பிடித்தபடி வேலை செய்கிறேன். என்னிடம் படித்த நிறைய மாணவர்கள் பெரிய இடத்தில் இருக்கின்றனர். அதுதான் எனக்குப் பெருமையான விஷயம். அரசுப் பள்ளிகள் எந்த அளவிலும் தனியார் பள்ளிக்குக் குறைந்ததில்லை. 

இருக்கும் வசதிகளை வைத்து என் மாணவர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மாநில அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். அது எனக்கு தற்போதும் நினைவில் வருகிறது. 

தரம் குறைந்த பேட்டைப் பயன்படுத்தி மற்ற வீராங்கனைகளோடு என் மாணவிகள் வெற்றிபெற்றது ஏகப்பட்ட சந்தோஷத்தைத் தந்தது. அரசு ஊழியர்களுக்கு இடையேயான போட்டியில் நான் கலந்துகொள்கிறேன். 2018 தேசிய அளவில் இறகுப் பந்து போட்டியில் பங்கேற்க முடிந்தது. 

2019-ல் சில காரணங்களால் பங்கேற்க முடியவில்லை.தற்போது இந்தாண்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை நேரு ஸ்டேயத்தில் நடந்த போட்டிகளில் 6 நபர்கள் தேர்வாகியுள்ளோம். 

அதில் நானும் ஒருவர். இன்று புனேவில் தேசிய அளவில் துவங்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். டேபிள் டென்னிஸ் பிரிவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளேன்" என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.


'National Public Service Games Competition!' - Teacher of Sivaganga school in Pune


A teacher from Government Girls Higher Secondary School, Manamadurai in Sivagangai district, is participating in the sports competition between civil servants. The sports greeters from Sivaganga district congratulate the teacher.

During the feather ball training, the teacher was happy to tell us about it ..., `` `` `` `` ` The game should not be banned at home, though some say, "Girls shouldn't play." So all those games I play nice. The ambition is to become a police officer or a teacher. Accordingly I became a teacher of Physical Education.

Having worked in private schools, I had no desire to attend public school. There is no excuse to leave students in private school. I was transferred to a state school by my father. Back then, the plight of public school students changed me. I wanted to be a service to the students and not to teach sports education.

I have a great place for a lot of my educated students. That was the proudest thing for me. Government schools are by no means inferior to private schools. My students have succeeded in many places in terms of facilities. They won a bronze medal at the state level table tennis tournament. I still remember it. It was a great pleasure to see my students succeed with other heroes using a low-quality hood.



I participate in the competition between civil servants. She was able to compete in the 2018 national feather ball competition. We have not been able to participate in 2019 for some reason. Now, this year's table tennis tournament in Chennai Nehru Stadium has been selected by 6 people I was one of them. Today we are going to participate in the national competition in Pune. I will be participating in various competitions in the table tennis division, ”he said.

No comments:

Post a Comment

Please Comment