மாணவர்களுக்கு புத்தகங்களை வைக்க பள்ளிக்கூடங்களில் ‘லாக்கர்’ வசதி
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு பெட்டக (லாக்கர்) வசதி வழங்கப்பட இருக்கிறது. அதாவது, எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பெட்டகம் அமைத்து கொடுக்கப்படுகிறது. இதில் அவர்கள் நோட்டுப் புத்தகம், எழுதுபொருட்கள் போன்றவற்றை வைத்து பாதுகாத்து கொள்ள முடியும்.
இதனால் மாணவர்கள் புத்தகப்பை சுமையை தினமும் வீட்டிற்கு கொண்டு செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 50 லட்சம் மாணவர்கள் பயன்tk அடைவார்கள். இந்த தகவலை அந்த மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வசதி தற்போது வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment