இண்டேன் காஸ் சிலிண்டருக்கு மின்னணு முறையில் கட்டணம்- வாடிக்கையாளர்களுக்கு ஐஓசி அறிவுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இண்டேன் காஸ் சிலிண்டருக்கு மின்னணு முறையில் கட்டணம்- வாடிக்கையாளர்களுக்கு ஐஓசி அறிவுறுத்தல்

*#🅱️ig News*

*🌐🌀🌐இண்டேன் காஸ் சிலிண்டருக்கு மின்னணு முறையில் கட்டணம்- வாடிக்கையாளர்களுக்கு ஐஓசி அறிவுறுத்தல்:*


_▪️வாடிக்கையாளர்கள் இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை மின்னணு முறையில் செலுத்தலாம். போன் மூலம் சிலிண்டர் பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு வரும் குறுந்தகவலில் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்._

_▪️இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த லிங்க்கில் சென்று சிலிண்டருக்கான தொகையைநெட் பாங்கிங், கிரெடிட், டெபிட்கார்டுகள், இ-வாலட் ஆகியவை மூலம் செலுத்தலாம். இந்த வழியில் சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்._

_▪️மற்றொரு வழியாக, டெலிவரி பணியாளர் சிலிண்டரை ஒப்படைக்கும்போது டிஜிட்டல் பேமென்ட் பெறும்படி வலியுறுத்தலாம். அவரை பணம் செலுத்தும் கருவியை (mPOS) கொண்டுவரு மாறு கூறி அந்த கருவி மூலம்பணம் செலுத்தலாம். பெரும்பாலும் ரொக்கமாக செலுத்துவதை தவிர்த்துவிடவும்._

_▪️இண்டேன் விநியோகஸ்தர்கள் சிலிண்டரை டெலிவரி செய்த பிறகு, வழங்கும் கேஷ் மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விற்பனை விலை சிலிண்டருக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியது. எனவே டெலிவரி செய்பவருக்கு 'டிப்ஸ்' கொடுப்பதை இந்தியன் ஆயில் ஆதரிக்கவில்லை._

_▪️மேலும் விவரங்களுக்கு சென்னையில் 044-24339235 / 24339236 ஆகிய எண்களில் காலை 9:30 முதல் மாலை 5:15 வரை தொடர்புகொள்ளலாம். அவசர சேவைக்கு 1906 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அணுகலாம். புகார்களுக்கு 1800-2333-555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளளாம்._

➖➖➖➖➖➖➖➖➖➖➖

  ```✨361° FL🅰️SH NEWS🦚```
           *ιηsтαηтℓү υρ∂αтε*

➖➖➖➖➖➖➖➖➖➖➖

No comments:

Post a Comment

Please Comment