`யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் தயார் செய்வது இனி ஈசி!' - கல்வியாளர் அட்வைஸ்
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால், அனைவருக்குமே சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. சேவை மனப்பான்மை, படிக்கும் ஆர்வம்,
விடா முயற்சி இவை அனைத்தும் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இன்றி நிறைய பேர் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில், ஆனந்த விகடன் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடத்த உள்ளன.
ஐ.ஏ.எஸ், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்க உள்ளனர். இந்நிகழ்வு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் 2020, மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 9.00 - 2.00 வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஐ.ஏ.எஸ் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்குப் புதிய வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கும். தேர்வு பற்றிய புரிந்துணர்வைக்க் கொடுக்கும்.
IAS, TNPSC தேர்வுகள் பற்றிய இந்தக் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி முகாமில் காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர். ரவி ஐ.பி.எஸ் அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார். அத்துடன், போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர்.
சங்கர சரவணன், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர்- இயக்குநர் சிவராஜவேல் ஆகியோர் ஊக்க உரையையும் ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால்போதும். இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவுடன் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன் கொடுத்த சின்ன மெசேஜ்...
``யு.பி.எஸ், டி.என்.பி.எஸ்.சி ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே சமயத்தில் தயாராவது எப்படி என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். அது பற்றிய சந்தேகங்கள், நுணுக்கங்கள் குறித்து மார்ச் 1 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனை முகாமில் விரிவாகப் பேசவுள்ளோம்.
அண்மையில் டி.என்.பி.எஸ்.சி பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுகுறித்தும் மாணவர்களுக்கு விளக்கவுரை வழங்க உள்ளோம்.
முன்பு டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு நிறைய இடைவெளி இருந்தது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அந்த இடைவெளி தற்போது குறைந்துள்ளது. எனவே இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே சமயத்தில் தயாராவது சுலபம். சரியான வழிகாட்டுதல் மட்டும் இருந்தால் போதும்.
அந்த வழிகாட்டுதல்களைத்தான், நாங்கள் வழங்க உள்ளோம். பொதுவாக, `யு.பி.எஸ்.சி போன்ற தேர்வுகளை எழுத எழுதத்தான், நம் தவறுகளை நாமே சரிசெய்துகொண்டு வெற்றிபெற முடியும்' என்று சொல்வார்கள். ஆனால் அது அதிக நேரம் எடுக்கும்.
தேர்வுகள் எழுத எழுத அனுபவம் கிடைப்பது உண்மைதான். ஆனால், ஒரே முயற்சியில் தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகளும் உள்ளன.
நிகழ்ச்சியில் முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும்.
இணையத்தில் பதிவு செய்ய விரும்புவோர் http://books.vikatan.com, www.vikatan.com, www.smartleadersias.com ஆகிய தளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாலே attempt-களைக் குறைக்க முடியும்.
நான் 15 வருடமாக இந்தத் துறையில் இருக்கிறேன். எனவே, மாணவர்கள் தேர்வின்போதும் தேர்வுக்குத் தயாராகும்போதும் எந்தந்த மாதிரியான தவறுகள் செய்கின்றனர் என்பதை ஓரளவுக்கு பகுப்பாய்வு செய்திருக்கிறேன். அதுதொடர்பாக இந்த ஆலோசனை முகாமில் பல்வேறு விஷயங்களை விவரிக்க உள்ளேன்.
அதுமட்டுமன்றி கிராமப்புற மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கச் சிறப்பு செஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள், தயார் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்'' என்றார்.
Easy to prepare for UPSC and TNPSC exams at once! - Academic Advice
Tens of thousands of students in Tamil Nadu are preparing for the exam with the dream of becoming an IAS and IPS. But not everyone has the right guidelines. Despite their service spirit, passion for study and perseverance, many people are unable to face the exam without proper guidance. To shape their IAS dream, Ananda Vikatan and the Smart Leaders IAS Academy are holding an advisory camp for IAS and TNPSC exams.
The IAS will provide guidance on how to prepare for TNPSC exams. The event will be held at St. Joseph's College Campus, Trichy, on Sunday, March 1, 2020 from 9.00 am to 2.00 pm. Students and parents can attend the event. Permission is free. This discussion program will provide fresh guidance and encouragement to students carrying out IAS dreams. Gives you an understanding of choice.
This discussion on the IAS and TNPSC examinations and the additional training of the police at the training camp was conducted by Dr. Ravi IPS is to deliver their special. In addition, the competition bibliographer and trainer Dr. Sankara Saravanan, Founder and Director of Smart Leaders IAS Academy, Sivarajawel, will be giving a motivational speech, advice and guidance on IAS and TNPSC exams and clarification of students' doubts. Even if Mistugal returns the number 66808012. Those who wish to register on the Internet can register at http://books.vikatan.com, www.vikatan.com and www.smartleadersias.com.
IAS and IPS dreamers must attend the event. Competitive Writer and Trainer Dr. Sankara Saravanan's Little Message for Everyone Traveling with IPS and IPS ... `` UPS, TNPSC Many people are confused as to how to prepare for both choices simultaneously. We will talk in detail at the consultation camp on March 1 to discuss its doubts and insights. Recently, changes have been made to the TNPSC curriculum and selection process. We will give a presentation to the students about it.
Previously there was plenty of space for TNPSC and UPSC exams. But as the TNPSC curriculum has changed, the gap has now narrowed. So it's easy to prepare for both choices at once. Only proper guidance is needed. Those are the guidelines we are going to provide. Generally, they will say, "Writing to make choices like UPSC, we can correct our mistakes and succeed." But it takes more time. It is true that you get the experience to write exams. But there are also steps to succeed in a single bid exam. Just give Mistakal a call at 044-66808012 to reserve the show.
Those who wish to register on the Internet can register at http://books.vikatan.com, www.vikatan.com and www.smartleadersias.com. Efforts can be reduced by writing exams and listening to the experiences of successful students. I have been in this industry for 15 years. So, I have partially analyzed what kind of mistakes students make when preparing for and choosing exams. I would like to describe various things in this counseling camp. Moreover, a special session has been organized to boost the confidence of the rural students. Those who are preparing for the competition and those who are interested in attending the camp, should get involved. ”


No comments:
Post a Comment
Please Comment