ஏழை மாணவர்களுக்காக ‘ஸ்மார்ட் கிளாஸ்' - சொந்த செலவில் அமைத்த மாற்றுத் திறனாளி ஆசிரியை
மாற்றுத் திறனாளி ஆசிரியை ஹேம்குமாரி என்பவர், தன்னிடம் பயிலும் ஏழை மாணவர்களுக்காக தன் சொந்த செலவில் அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றை ஏற்படுத்தி, அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத் தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் 156 மாணவ, மாணவியர் பயில் கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் நாடோடி வாழ்க்கை வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள்தான். முதல் தலை முறையாக கல்வி கற்க வந்துள்ள இம்மாணவர்களின் பெற்றோர், வருமானத்துக்காக அவ்வப்போது இடம் விட்டு இடம் நகர்ந்து வாழக் கூடியவர்கள்.
உற்றார் உறவினர் களின் பராமரிப்பிலேயே வளரும் சூழலில் உள்ளவர்கள். அத்தகைய மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து, அவர்களுக்கும் கற்பிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் தலைமை ஆசிரியர் சாந்தி.
இதேபள்ளியில் 4-ம் வகுப்புக் கான ஆசிரியையாக ஹேம்குமாரி என்பவர் பணிபுரிகிறார். மாற்றுத் திறனாளியான இவர், ஆசிரியை யாக இருந்த தனது தாயை முன் மாதிரியாகக் கொண்டு, முதுகலைப் பட்டம் மற்றும் கல்வியியல் பயின்று 2004-ல் பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியை தொடங் கினார்.
பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பச் சூழலை அறிந்து, அவர்களுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க முடிவெடுத் தவர், தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். ஆசிரியை ஹேம் குமாரியின் அக்கறையை கண்ட மாணவர்களின் பெற்றோரும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பள்ளி யில் கடந்த 2019-ம் ஆண்டு தனது சொந்த செலவில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.
இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் புரொஜக்டர் மூலம் காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது தவிர கற்பித்தலுக்கான துணைக் கருவிகள் மற்றும் உப கரணங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகள் நடத்தப்படுகின்றன. மேலும், கைவினை தொழில்களையும் கற்றுத் தருகிறார்.
மாற்றுத் திறனாளி ஆசிரியை யின் செயலை அறிந்து, பல தன் னார்வ அமைப்புகளும் அவருக்கு விருது வழங்கி கவுரவித்து வரு கின்றனர். அண்மையில் ஈரோட்டில் ரோட்டரி சங்கம் சார்பில் கவுர விக்கப்பட்டுள்ளார் ஹேம் குமாரி.
‘‘சக ஆசிரியர்களின் ஒத் துழைப்பு, மாணவர்களின் பாசம் எனக்கு மிகுந்த மன வலிமையை கொடுக்கிறது. இதனாலேயே இந்த ஸ்மார்ட் வகுப்பறையை என் னால் உருவாக்க முடிந்தது. இதன் மூலம் இங்குள்ள மாணவர் களிடையே கூடுதல் நேரத்தை செலவழிக்கிறேன்.
இதனால் மாற்றுத் திறனாளி என்ற நினைவே எனக்கு இருப்பதில்லை. இந்த ஸ்மார்ட் வகுப்பறையின் மூலம் இங்கு பயிலும் குழந்தைகள் தனி யார் பள்ளி மாணவர்களுக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் என்ற நிலைக்கு உருவாக்கி வரு கிறேன்'' என்கிறார் ஆசிரியை ஹேம்குமாரி.
The Smart Class' for Poor Students
Hemkumari is a teacher of substitute skills, and she is educating and educating the poor students in her school at her own expense. Cuddalore District Pennadad is a panchayat union middle school. There are 156 students in the school. Most of the students attending the school are children of the nomadic community.
Parents of these children who have been educated for the first time are able to move from place to place for income. People who grow up in the care of their relatives. Head teacher Shanti has brought such students to school and created a teaching environment for them. Hemkumari works as a teacher in 4th grade. She is an alternative teacher, who modeled her mother as a teacher, and began her work as a teacher in 2004 at Pennadam Panchayat Union Middle School, earning a master's degree and education.
He then learned about the family environment of the students and decided to give them a good education and continued to take special classes. Parents of students who saw the care of teacher Hem Kumari were also encouraged by the students. This is followed by a smart classroom for the school in 2019 at a cost of Rs. Lessons are taught via visualization by the projector in this smart classroom. In addition, subtraction, subtraction, and multiplication are conducted with teaching tools and subtasks.
He also teaches crafts. Many scholars have been honored and honored by the NGO's for their work in learning the work of the translator. Hem Kumari has recently been honored on behalf of the Rotary Association of Erode. The enthusiasm of the students and the affection of the students gives me great strength. This is why I was able to create this smart classroom.
By this I mean spending more time among the students here. So I have no idea of being an alternative. With this smart classroom, I am making the children who are studying here a little less of a schoolgirl, ”says teacher Hemkumari.


No comments:
Post a Comment
Please Comment