இணையதளத்தில் முக்கிய தரவுகளை பார்க்க கட்டுப்பாடு இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு
முழுவதும் தன்னார்வ வானிலை கணிப்பாளர்கள் புற்றீ சல்போல் பெருகுவதைத் தடுக்க, இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் முக்கிய வானிலை தரவுகளை பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் 1864-ம் ஆண்டு வீசிய புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. பின்னர் 1866, 1871 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பொய்த் ததால் வறட்சி நிலவியது.
இந்நிலையில், நாடு முழுவதும் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க ஏதுவாக பிரிட்டிஷ் இந்திய அரசால், 1875-ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக் கப்பட்டு, கொல்கத்தாவை தலை மையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது. உலக வானிலைத் தரவு களை பெறுவதற்கு கணினிகள் மிக அவசியமாக இருந்தன. அதனால் இந்தியாவில் கணினி முதன்முத லில் அறிமுகப்படுத்தப்பட்ட சில முக்கிய துறைகளில் வானிலை ஆய்வு மையமும் ஒன்று. 1982-ம் ஆண்டு இந்தியாவின் இன்சாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், வரிசை யாக பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
இந்த செயற்கைக் கோள்கள் வானிலையைக் கணிப்பதற்கு பேருதவியாக இருந்தன.
வானி லைத் தரவுகளை செயற்கைக் கோள்கள் மூலம் பெறும், முதல் வளர்ந்து வரும் நாடு இந்தியாதான். சமகால தொழில்நுட்ப வளர்ச் சிக்கு ஏற்றவாறு, தொடர்ந்து மேம் படுத்தப்பட்டு வருகிறது. தற் போது இலங்கை, மாலத்தீவு உள் ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வானிலை தரவுகள், கணிப்பு கள், முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது.
இந்தியா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வானிலை தரவுகள், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் அறியும் வகை யில், இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில், உலக நாடுகளின் வானிலை ஆய்வு மையங்கள் வெளியிட்டு வருகின் றன.
வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்கள் மட்டுமே செய்தித்தாள்கள், தொலைக்காட்சி களில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, யார் வேண்டு மானாலும் வானிலை விவரங் களை, முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப், யூடியூப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவை வலை தளங்கள் வழியாக பொதுமக்களி டம் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வானிலை என்பது நொடிக்கு நொடி மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது. அதனால் வானிலை ஆய்வு மையமானது, அதற்கே உரிய பொறுப்புடன், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் விவரங்களை மட்டுமே, சரியான தருணத்தில் வெளியிட்டு வந்தன.
ஆனால், நாடு முழுவதும் பலர், வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து தரவு களை எடுத்து, சுயமாகக் கணிக் கிறோம் என்ற பெயரில், வேகமாக சமூக வலைதளங்களில் தகவல் களைப் பரப்புவதாகவும், அதனால் பொதுமக்கள் குழப்பத்துக்கு உள் ளாவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.
இதைத் தொடர்ந்து முக்கிய வானிலை தரவுகளை இணையதளம் வழி யாக அனைவரும் பார்வையிட முடியாத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:
தன்னார்வ அடிப்படையில் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுபவர்கள் யாரும், சொந்தமாகக் கருவிகளை வைத்து கண்காணிக்கவில்லை.
அவர்கள் அது சார்ந்த படிப்பையோ, அங் கீகரிக்கப்பட்ட நிறுவன பயிற்சி யையோ முடித்தவர்களும் அல்ல. இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்தான் அவர்களுக்கு முக்கிய ஆதாரம். இதை வைத்து தாங்களே கணித்தது போன்று தங்களை பிரபலப்படுத்திக் கொள் கின்றனர். அவர்களில் பலர் வெளியிடும் தகவல்கள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் வானிலை ஆய்வு மையம் சார்பில், உலக நாடுகளின் தரவுகள், செயற்கைக்கோள் தரவு கள், ரேடார் தரவுகள் அடிப் படையில், கணினி மூலமாக உரு வாக்கப்படும் மாடல்கள், காற்று வீசும் திசை குறித்த அனிமேஷன் கள், முக்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள், கடல் மற்றும் நில வெப்பநிலை குறித்த வரைபடங்கள், ரேடார் படங்கள் உள்ளிட்டவற்றை, துறை அலுவலர்களைத் தவிர்த்து யாரும் பார்க்க முடியாத வகையில் இணையதளத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குத் தேவை யான பொதுவான விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகை யில் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தொடங் கப்பட்டுள்ளன. இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள மற்ற மையங்களிலும் தொடங்கப்பட்டுள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Control of the important data on the website of Indian Meteorological Department country
To prevent the spread of amateur meteorologists throughout the country, the Indian Meteorological Center has been restricted to viewing important weather data on its website. The storm of 1864 was severely damaged in Kolkata. Then, in 1866 and 1871, various states experienced droughts due to monsoon.
In 1875, the Indian Meteorological Department was established in 1875 by the British Indian Government to provide weather forecasts around the country and was headquartered in Kolkata. Computers were essential to obtaining global weather data. The Meteorological Center is one of the few major sectors that was introduced in India. After the launch of India's INSAT satellite in 1982, several satellites were sent in sequence. These satellites were great for predicting weather.
India is the first emerging country to receive radio light data from satellites. In keeping with contemporary technological development, we are constantly being made. At the moment, Sri Lanka has been providing weather data, forecasts and forecasts to various countries including the Maldives.
Meteorological data from India and surrounding areas are published by the World Meteorological Center of India, on the Indian Meteorological Department website, as known by the Central and State Government Departments.
With only meteorological data being published in newspapers and TVs, due to technological advances, the public has been able to carry weather data, Facebook, Twitter, WhatsApp, YouTube, Telegram, Instagram etc. through web sites.
The weather can change from moment to moment. So the Meteorological Center, with its own responsibility, has only released the details that are likely to affect people. But many people across the country have complained to the Indian Meteorological Center that they are taking data from the meteorological website and spreading the information on social networks in the name of self-prediction, causing public confusion.
This is followed by restrictions on access to important weather data on the internet. Chennai Meteorological Department officials said: "No one voluntarily issues meteorological forecasts.
They are not completing a related course or specialized training. Their main source is the Indian Meteorological Center website. With this, they are popularizing themselves as predicted. The information that many of them publish confuses people.
Thus, on behalf of the meteorological department, the departments of the world data, satellite data, radar data in the base, computer generated models, windsurfing animations, major satellite photos, maps of sea and land temperature, radar images, etc. The co Restrictions have been placed on yatalat.
The Facebook and Twitter pages have been launched on behalf of the Chennai Meteorological Department in a bid to provide the general public with immediate details. Similarly, other centers across the country have been launched. Thus he said.

No comments:
Post a Comment
Please Comment