பள்ளிக்கல்வித் துறை செயலர் இடமாற்றம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிக்கல்வித் துறை செயலர் இடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் செயலராக இருந்த பிரதீப் யாதவ், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த பிரதீப் யாதவ் இடமாற்றம் செய்யப்பட்டு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் காதித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்கு வரத்துத் துறை செயலராக இருந்த பி.சந்திரமோகன் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 


அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்கு வரத்துத் துறை செயலராகவும், இளைஞர்நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக இருந்த தீரஜ்குமார், பள்ளிக்கல்வித் துறை செயல ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை செயலர் பதவி யையும் தீரஜ்குமார் கூடுதலாக கவனிப்பார். 

 கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் காதித் துறை செயல ராக இருந்த குமார் ஜெயந்த், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக் கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை செயலராக நியமிக்கப்பட் டுள்ள தீரஜ்குமார் கூடுதலாக கவனித்து வந்த எரிசக்தித் துறை செயலர் பதவி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் ஏ.கார்த்திக் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பிரதீப் யாதவ் மாற்றம் ஏன்? 

தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக 2017 ஆகஸ்ட் 24-ம் தேதி நியமிக்கப்பட்ட பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிகள் உருவாக்கம், மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகள் இணைப்பு, கல்வி சார்ந்த அனைத்து பணிகளும் எமிஸ் இணையதளம் வழியாகவே மேற்கொள்ளுதல், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணி குறைப்பு, முதன்மைக் கல்வி அதிகாரிக்கு கூடுதல் அதிகாரம் என துறை ரீதியாகவும் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். இதுதவிர மாணவர்களுக்கு கல்விச்சுற்றுலா போன்ற நலப்பணிகளையும் மேற் கொண்டார். இதனால், கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்தனர். 

அதேநேரம், ஆசிரியர்கள் போராட் டத்தை சரியாக கையாளவில்லை எனவும், மத்திய அரசு திட்டங் களுக்கு முக்கியத்துவம் வழங்கிய தாகவும் பிரதீப் யாதவ் மீது குற் றச்சாட்டுகள் நிலவின. இதற் கிடையே, துறை அமைச்சர் செங் கோட்டையனின் அறிவுறுத்த லுக்கு மாறாக தன்னிச்சையாக சில சுற்றறிக்கைளை பிரதீப் யாதவ் தயாரித்து அனுப்பியதாக கூறப் படுகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது வந்தது. இலவச கட்டாயக் கல்வி சட்டத் திருத்தத்தின்படி 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்போவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித் தது. 

கடும் எதிர்ப்புகளால் இந்த முடிவை கைவிட அமைச்சர் செங் கோட்டையன் விரும்பியபோதும், சட்டத்திருத்தத்தை காரணம் காட்டி தேர்வை நடத்த பிரதீப் யாதவ் வலியுறுத்தியதாக கூறப் படுகிறது. இந்தச் சூழலில், அமைச்சரை சந்தித்த ஆசிரியர் சங்கத்தினர், நிர்வாக ரீதியாக பொதுத்தேர்வை நடத்துவதில் பல்வேறு சிரமங் கள் இருப்பதையும், இதில் தவ றான வழிகாட்டுதலை செயலர் வழங்குவதாகவும் தெரிவித்துள்ள னர். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், அதற்கு காரணமாக இருந்த செயலரும் தற்போது பணியிடம் மாற்றப் பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி இந்து தமிழ் திசை 07/02/2020

No comments:

Post a Comment

Please Comment