இஸ்ரோவின் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்ப பதிவு நாளை நிறைவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இஸ்ரோவின் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்ப பதிவு நாளை நிறைவு

இஸ்ரோவின் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்ப பதிவு நாளை நிறைவு 

‘யுவிகா' திட்டத்தின்கீழ் மாண வர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய் முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத் தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டுக் கான ‘யுவிகா’ பயிற்சி இஸ்ரோ வின் 4 மையங்களிலும் மே 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விருப்பமுள்ள மாணவர்கள் நாளைக்குள் (பிப்.24) www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக விண் ணப்பிக்க வேண்டும். பள்ளியில் 9-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர் களின் தற்காலிக பட்டியல் மார்ச் 2-ல் வெளியாகும். மேலும் தகவல்களைப் பெற 080 2217 2269 தொலைபேசி எண் அல்லது yuvika2020@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Please Comment