2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 


தமிழகம், புதுவையில் அடுத்த இரு நாட் களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அண்மை காலமாக பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவில் குளிர்ச்சியான கால நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதுச்சேரி கடற்கரை பகுதியில் லேசான மழை பொழிவு இருந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: 


வங்கக் கடலில் இருந்து கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு ஆகிய திசைகளில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

Please Comment