தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தி.மலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 



ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு 

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண் ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களது தமிழ்தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத் தும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. மாவட்டத்துக்கு ஒருவர் என தேர்வு செய்து, தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் என கடந்த 2015-ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து தனி விவரக் குறிப்பேடுகளுடன் விண்ணப்பங் களை பெற்று, தகுதியான விண் ணப்பங்களை தொகுத்து அனுப்பு மாறு சென்னை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் உத்தரவிட்டுள் ளார். 

 எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கு தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கின்றன. விருதுக்கான விண்ணப்பம் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். 


சுயவிவரக் குறிப்பு விண்ணப்பிக்கும்போது, சுய விவரக் குறிப்பு மற்றும் 2 நிழற்படம், சம்பந்தப்பட்டவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகியவற்றுடன், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் விருதுகள் ஏதும், இதற்கு முன்பு பெற்றிருக்கக் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதி உதவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment