கண்ணாடி அணிபவர்களின் கவனத்துக்கு...
பள்ளிப்பருவத்தில் கண் பிரச்னை கண்டறியப்பட்டு கண்ணாடி பரிந்துரைக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக இதை ஏற்றுக் கொள்வதில்லை. 'நான் காலேஜ் படிக்கும்போதுதான் கண்ணாடி போட்டேன். இவனைப் பாருங்க டாக்டர், சரியா சாப்பிடுறது இல்லை.
காய்கறிகள் எதையுமே தொடுறதில்லை.. எப்பப்பாரு செல்போன், டிவிதான்.. அதான் கண்ணு கெட்டு போயிடுச்சு' என்பார்கள் சிலர். ஒரு படி மேலே போய் 'இனிமேல் காய் எல்லாம் கொடுத்து சரி பண்றேன். இப்ப கண்ணாடி வேண்டாமே டாக்டர்' என்றும் கூறுவார்கள்.
கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறப்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை பிரச்னைகளை காய்கறி மூலமாகவோ கண் பயிற்சிகள் மூலமாகவோ சரி செய்ய முடியாது. 'காய்கறி வேண்டாமா? என்ன இப்படி சொல்றீங்க டாக்டர்?' என்று கேட்கிறீர்களா...
காய்கறிகள், சத்துள்ள உணவுகள், திரைப்பயன்பாட்டை குறைப்பது கண்ணுக்கான பயிற்சிகள் இவை எல்லாமே நல்ல விஷயங்கள்தான். ஆனால், 'நோய் முதல் நாடி' என்று முன்னோர் கூறியிருக்கிறார்கள் அல்லவா... கண்ணாடி அணிய வேண்டியதன் பின்னிருக்கும் காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
பெரும்பாலும் கண்களின் அமைப்பு சற்று மாறுபட்டு இருப்பதாலேயே பலருக்கும் கண்ணாடி அணியும் அவசியம் ஏற்படுகிறது. வெகு சிலருக்கே பொதுவான உடல்நலக் குறைபாடு, அதிகபட்ச ஊட்டச்சத்தின்மை இவற்றால் பார்வை பாதிப்பு தோன்றுகிறது.
கண் அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது கண் பந்தின் முன்பின் நீளம். நீளத்தைப் போலவே கருவிழி, விழித்திரை இவற்றின் அமைப்பு மற்றும் அவற்றின் வளைவில்(Curvature) ஏற்படும் சிற்சில மாற்றங்கள் இவற்றாலும் கண்ணாடி அணிய வேண்டியதிருக்கும்.
எப்படி நம் ஒவ்வொருவருக்கும் உயரம், விரல்களின் நீளம், காதின் அளவு, மூக்கின் அளவு இவை எல்லாம் ஒரே போல் இருப்பதில்லையோ அதேபோல கண்களின் அமைப்பும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது.
இத்தகைய சிறிய அளவிலான மாற்றங்கள் இயற்கையின் அமைப்பில் மிகவும் இயல்பானவை.
இவை வழக்கமான நோய்களோ தொற்றுநோய்களோ அல்ல. வெறும் ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள அச்சுநீள மாறுபாட்டினால் 3.00 டயாப்டர் அளவுக்கு கண்ணாடி தேவைப்படுகிறது.
இதுவே வளைவில் ஏற்படும் ஒரு மில்லிமீட்டர் மாறுபாட்டில் 6.00 டயாப்டர் அளவிற்கு கண்ணாடி தேவைப்படுகிறது. கிட்டப்பார்வை என்றழைக்கப்படும் மையோபியா(Myopia) பிரச்னையில் கண் பந்தின் நீளம் சற்று அதிகமாக இருக்கும். இதை சரிசெய்ய குழிவு லென்சை(Concave lens) பயன்படுத்துவார்கள்.
தூரப்பார்வை பிரச்சனை(Hypermetropia) உடைய நோயாளிகளுக்கு குவிவு லென்ஸ் (convex lens) தேவைப்படும். சிதறல் பார்வைக்கு(Astigmatism) சிலிண்டர் வடிவிலான லென்ஸ்கள்(Cylindrical lens) பொருத்தப்படுகின்றன. 40 வயது வரை கண்ணாடி அணியாத நபர்களுக்கும் அதன் பின் படிப்பதில் சிரமம் ஏற்படும்.
பிரஸ்பயோபியா என்ற இந்த நிலையையும் குவிவு லென்ஸ் மூலமாகச் சரி செய்யலாம். சிலருக்கு அச்சு நீளம் மற்றும் வளைவு இரண்டிலும் வித்தியாசம் இருப்பதால் இரண்டு வகையான லென்ஸ்களும் சேர்ந்து கொடுக்க வேண்டியதிருக்கும். 'சரி, கண்ணாடி போட்டு விட்டேன், இப்போது பார்வை நன்றாகத் தெரிகிறது, தலைவலியும் வருவதில்லை.
ஆனால் வருடாவருடம் செக்கப்புக்கு வரச் சொல்கிறீர்களே ஏன்?' எனக்கு அந்தக் கண்ணாடியே சரியாகத்தான் இருக்கிறது. அந்தச் சீட்டை வைத்து கடையிலோ ஆன்லைனிலோ கண்ணாடி வாங்கிக் கொண்டால் போதாதா?' என்று நீங்கள் யோசிக்கலாம்.
குழந்தை வளர வளர கை கால்கள், விரல்கள் இவற்றின் நீளம் மாறுபடுகிறதல்லவா? அதைப் போலவே கண்களின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். இதனால் கண்ணாடியின் லென்சில் நாம் பொருத்தி இருக்கும் அளவும் மாறுபடும்.
இதைக் கண்டறிய வருடாந்திர பரிசோதனை அவசியம்.
கிட்டப்பார்வை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு கண்ணின் அளவு சற்று பெரியதாக இருப்பதால் கண்களின் ஓரங்களில் அதாவது விழித்திரை பகுதியில் சிறிய ஓட்டையோ(Hole) விரிசலோ(Degeneration) ஏற்படலாம்.
இந்த ஓட்டைகளின் வழியாகக் கண்களின் உட்புறம் இருக்கும் நீர் புகுந்து கொண்டால் விழித்திரை விலகல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றை சீரான பரிசோதனையின் மூலம் விரைவாகக் கண்டுபிடிக்க முடியும்.
விழித்திரை விலகல் போன்ற பெரிய தொந்தரவுகள் வரும் முன்னரே இந்த ஓட்டைகளை லேசர் மூலமாகச் சரி செய்துவிடலாம்.
சிதறல் பார்வையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்குக் கண்களின் கருவிழியில் குறைபாடுகள் உள்ளதா என்றும் அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
இத்தகைய நபர்களுக்கு கருவிழியில் கெரட்டோகோனஸ்(Keratoconus) போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கண் அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் கிட்டப்பார்வை குறைபாடு உள்ளோருக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் அவ்வப்போது செய்யும் பரிசோதனையின்போது கண்டுபிடித்து எளிதிலேயே குணமாக்கி விட முடியும். வழக்கமான கண் பரிசோதனையின் போது சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள், சில தொற்று நோய்கள், ரத்தக்கொதிப்பு போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும்.
For the glass wearers ...
Parents of children who have been diagnosed with eye problems in school and who are prescribed glasses do not readily accept it. 'When I was in college, I put on glasses. Look at him doctor, okay not eating. Vegetables do not touch anything .. Whenever the cell phone, TV .. That 's the eye. Go one step further and give 'kai' all right now. They don't want this glass. ' Alleged vision, distance vision, and scattered vision problems that are required to wear glasses cannot be fixed by vegetable or eye exercises. 'Don't want a vegetable? What does the doctor say? ' Do you hear that ...
Vegetables, nutritious foods, curtains and eye exercises are all good things. But, as the foretold 'disease is the first country' ... the reason behind wearing glasses is different for everyone. Often, eye makeup is slightly different and many people need glasses. For most people, vision loss is caused by a general lack of health and high levels of malnutrition. The most important role in eye formation is the length of the front of the eye ball. Glass may also be worn by changes in the structure of the iris, retina and the curvature of their curves, similar to their length. The height of each of us, the length of the fingers, the size of the ears, the size of the nose are all the same and the structure of the eyes varies from one to another.
Such small-scale changes are very natural in nature. These are not typical diseases or infections. Glass needs a size of 3.00 diapers due to the axial difference of just one millimeter. This requires a glass of 6.00 diopter in a millimeter variation of the curve. The problem with myopia problem is the shortening of the eye ball. To correct this, they use a concave lens. Patients with hypermetropia may need a convex lens. Cylindrical lenses are fitted with cylindrical lenses for astigmatism. People who don't wear glasses until the age of 40 will have difficulty reading. This state of presbyopia can also be corrected by a focal lens.
For some people the difference between the length and curvature of the print is that both types of lenses need to be put together. 'Well, I put on the glass, and now the sight looks good and no headaches are coming. But why are you asking me to come to Chekkup annually? ' I have exactly the specs. Isn't that enough to buy glasses in the store or online with the ticket? ' You might think that. Does the length of the hands and fingers vary as the baby grows? Similarly, the development of the eyes. This will change the size we fit in the lens of the glass. An annual examination is necessary to diagnose this. Degeneration may occur at the edges of the eye, such as a small hole in the retina, as the size of the eye is slightly larger for people with myopia.
If water enters the inner part of the eye through these holes, problems such as retinal deviation can occur. These can be quickly detected by consistent testing. These holes can be fixed with a laser before major disturbances such as retinal distortion occur. Occasionally, people who suffer from blurred vision may also have eye irritations.Such individuals may have problems with the keratoconus in the eyeball. Studies show that people with hearing impairments are more likely to develop eye problems. This can be detected and cured easily with periodic examination. Regular eye exams can also detect diabetic retinopathy, certain infections and bleeding.

No comments:
Post a Comment
Please Comment